உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

இன்றைய ராசி பலன்கள் – 13.08.2026

ராசி பலன்கள் 1 வாரம் முன்
92 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிக்கல்கள் வரக்கூடிய நாளாக இருக்கும். போட்டி பொறாமையால் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. உடன் இருப்பவர்களோடு கவனமாக பேசி பழகுங்கள். யாரையும் முழுசாக நம்ப வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக செயல்பட வேண்டும். உங்களுக்கு நடக்கும் நல்ல விஷயங்களை வெளிப்படையாக யாரிடமும் சொல்லாதீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். தேவையில்லாத டென்ஷன் குறையும். நீண்ட நாள் சந்தேகங்கள் விலகும். பிள்ளைகளோடு நீண்ட நேரம் பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று மனக்கவலை இருக்கும். சோகத்திலேயே இருக்கக்கூடிய சூழ்நிலை கூட சில பேருக்கு வரலாம். இருப்பினும் உங்களுடைய கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்ள வேண்டும். இறை நம்பிக்கை உங்களை இன்று காப்பாற்றும். இஷ்ட தெய்வ வழிபாடு செய்யுங்கள். மனதிற்கு பிடித்த நபர்களோடு பேசுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் மனது ஈடுபடும். தேவையில்லாத பிரச்சினைகள் உங்களை விட்டு விலகும். மனம் நிம்மதி அடையும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேவைக்கு ஏற்ப இன்று பேசினால் போதும். பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள். வேலையில் அதிக ஈடுபாடு காட்டுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று முன்கோபம் அதிகமாக வரும். நல்ல நல்ல விஷயங்களை இழப்பதற்கு உங்களுடைய கோபம் காரணமாக இருக்கும். கூடுமானவரை கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்பட்டால் இந்த நாள் இனிய நாளாக அமையும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு இருப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். தேவையில்லாத எதிரிகள் தானாக உங்களை விட்டு விலகுவார்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அதிர்ஷ்டக்காரர்களாக வலம் வரப்போகிறீர்கள். நீங்கள் நினைத்த நல்லது நினைக்காத நல்லது அனைத்தும் உங்களைத் தேடி வரும். வேலையிலும் வியாபாரத்தையும் நல்ல பெயர் கிடைக்கும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை அமையும் சுபகாரிய தடை விலகும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுகபோக வாழ்க்கை தான். வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் என்று இந்த நாள் இனிய நாளாக அமையும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களைப் பார்ப்பவர்களுக்கே பொறாமை வரும். அந்த அளவுக்கு திறமை வெளிப்படும் நாளாக இருக்கும். உயர் அதிகாரிகளோடு இருந்து வந்த வாக்குவாதம் சரியாகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். காரியத்தடை விலகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும் வீண் விரய செலவுகள் குறையும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். தாமதத்தால் சின்னச் சின்ன பிரச்சினைகள் வர வாய்ப்புகள் உள்ளது. முக்கியமான அப்பாயிண்ட்மெண்ட் மீட்டிங் ஏதாவது இருந்தால் முன்கூட்டியே அந்த இடத்திற்கு செல்வது நல்லது. செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை துணையோடு வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கவனமாக செயல்பட வேண்டும். சின்னச் சின்ன காரியத்தடை வர வாய்ப்பு உள்ளது. உங்களுடைய முன்னேற்றத்திலும் சின்ன தடை வரலாம். அதிகம் பேசாதீர்கள். மூன்றாவது நபரை முழுசாக நம்ப வேண்டாம். தேவைக்கு ஏற்றவாறு பேசினால் போதும். பேசுவதை குறைக்கும் போது பிரச்சினைகளும் குறையும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 19.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். வீட்டில் தனம் தானியம் கொழிக்கும்.…

57 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 18.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். நேரத்திற்கு ஆரோக்கியமான சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஓய்வு என்று இந்த நாள், மகிழ்ச்சியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும்…

57 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 17.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையான நாளாக இருக்கும். சில பல பிரச்சினைகள் வந்தாலும், அதை பொறுமையாக எதிர்கொள்வீர்கள். பிரச்சினைகளுக்கு உண்டான தீர்வை அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு…

73 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 15.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். திறமையாக உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். தேவைக்கு அதிகமாகவே அனுபவம் கிடைக்கும். வீட்டில் இருந்து வந்த பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு…

94 0 0