உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

யாழ்ப்பாண மாவட்டச் செயலக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் புதிய உதவிப் பணிப்பாளர் கடமையேற்பு!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
97 பார்வைகள்

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதில் உதவிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.எம்.ஆர்.என்.கே. அழககோன், இன்றைய தினம் (06.08.2026) காலை 9.00 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் முன்னிலையில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, டித்வா புயல் அனர்த்தத்தின் போது  சிறப்பாக கடமையாற்றிய மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர், அனர்த்த முகாமைத்துவ நிலைய உத்தியோகத்தர்கள், மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் அலுவலர் மற்றும் அவர்களது உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் அரசாங்க அதிபர் தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்தார்.

அதேவேளை, புதிதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ள திரு. ஏ.எம்.ஆர்.என்.கே. அழககோன் அவர்களை  வரவேற்று, புதிய பொறுப்பில் சிறப்பாகப் பணியாற்ற வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும், இதுவரை யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளராகப் பணியாற்றிய திரு. ரி.என். சூரியராஜா அவர்கள், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் உதவிப் பணிப்பாளராக  கடமையேற்க்கவுள்ளார்.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் உள்ளிட்ட மாவட்டச் செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், அனர்த்த முகாமைத்துவ நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

54 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

47 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

53 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

72 0 0