ஓமந்தை மத்திய கல்லூரிக்கு சத்தியலிங்கம் எம்.பி விஜயம்.!
வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ஓமந்தை மத்திய கல்லூரிக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் இன்று (04.08.2026) களவிஜயம் செய்திருந்தார்.
இதன்போது பாடசாலையின் பிரதி அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கத்தினர் ஆகியோரை சந்தித்து பாடசாலையின் தேவைப்பாடுகள், முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது பாடசாலை நிர்வாகத்தினரால் முன்னிலைப்படுத்தப்பட்ட பெளதீக வளப்பிரச்சினைகள் தொடர்பிலும், ஏனைய சில பிரச்சினைகள் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் உடனடியாக வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் தொலைபேசியில் கலந்துரையாடினார்.
மேலதிகமான விடயங்கள் தொடர்பிலும் உரிய தரப்பினருடன் கலந்துரையாடியிருந்தார். அத்தோடு முன்னிலைப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வுகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது தெரிவித்தார்.
இந்த விஜயத்தின்போது வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் கந்தசாமி சிவபாலன், நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் பாலச்சந்திரன் சிந்துஜன் ஆகியோரும் இணைந்திருந்தனர்.


