கோவில்குளம் ஐயப்பன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா.!
வவுனியா கோவில்குளம் ஐயப்பன் முன்பள்ளியின் 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்த விளையாட்டு விழா நேற்று முன்தினம் 01.08.2026 முன்பள்ளியின் பொறுப்பாசிரியர் தலைமையில் மிக சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் செயலாளரும் சமாதான நீதவானுமாகிய பாலச்சந்திரன் சிந்துஜன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.
சிறப்பு விருந்தினர்களாக வவுனியா மாநகரசபை உறுப்பினர்களான திருமதி.உருத்திரசிங்கம் யோகேஸ்வரி மற்றும் வைரமுத்து வரதலட்சுமி, முன்னாள் உபநகரபிதா க.சந்திரகுலசிங்கம் ஆகியோரும் கெளரவ விருந்தினர்களாக வவுனியா பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவரும் ஓய்வுநிலை அதிபருமாகிய சி.வரதராசா, அன்பேசிவம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் திருமதி.தயாளரூபா, வவுனியா தெற்கு பிரதேசசபை உறுப்பினர் திருமதி.பத்திமா கெபிரியேல், வவுனியா மாவட்ட பதிப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் மு.விஜயகாந்தன், அயல் முன்பள்ளி ஆசிரியர்கள், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு நிகழ்வுகள், இசையும் அசையும் நிகழ்வு, விநோத உடை நிகழ்வு என்பன இடம்பெற்றதுடன் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.



