உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 31.07.2026

ராசி பலன்கள் 2 மாதங்கள் முன்
153 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். அம்மன் வழிபாடு மனதிற்கு நிறைவைத் தரும். தேவையில்லாத மனக் கவலைகள் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பெண் பிள்ளைகளால் மன மகிழ்ச்சி ஏற்படும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். பெரிய அளவில் வந்த பிரச்சினைகள் கூட, வந்த தடம் தெரியாமல் காணாமல் போகும். இறைவழிபாடு செய்வது மனதிற்கு அமைதியைத் தரும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் சந்தேகங்கள் விலகி நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியம் நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வீண் விரைய செலவுகள் குறையும். நீண்ட தூர பயணங்களால் நன்மை உண்டாகும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் கொஞ்சம் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். வீட்டில் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து பேச வேண்டும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுங்கள். முன்பின் தெரியாதவர்களை முழுமையாக நம்ப வேண்டாம். தேவையில்லாத விஷயங்களை அனாவசியமாக பேச வேண்டாம். உங்களுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வராத கடன் வசூல் ஆகும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுடைய கை ஓங்கி நிற்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சம்பள உயர்வு பதவி உயர்வுக்காக மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி தரும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகம் பிறக்கும். சோம்பேறித்தனம் விலகும். கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைக்கும். சுப செலவுகள் ஏற்படும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குறிப்பாக பெண்களுக்கு இன்று இரட்டிப்பு சந்தோஷம் கிடைக்கும். அம்மன் வழிபாடு மனதிற்கு நிறைவை தரும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் இருக்கட்டும். மூன்றாவது நபரை முழுமையாக நம்ப வேண்டாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிரமங்கள் இருக்கும். சின்ன சின்ன பிரச்சினைகளை கூட மனதில் போட்டு குழப்பிக் கொண்டு தேவையில்லாமல் நேரத்தை வீணடிப்பீர்கள். வேலையில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை வரலாம். மனதை ஒரு நிலைப்படுத்துங்கள். இறைவழிபாடு செய்யுங்கள். தேவையில்லாத சிந்தனைகளை விட்டு விடுங்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. தேவை இல்லாத பொருட்களை வாங்கவே கூடாது. மலிவு விலையில் விற்கும் பொருட்களை கட்டாயமாக வாங்க கூடாது. ஏதாவது ஒரு இடத்தில் ஏமாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. கவனமாக செயல்படுங்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று உற்சாகமாக இருப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்லது நடக்கும். நல்ல நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். தேவையில்லாத எதிரி தொல்லை விலகும். கண் திருஷ்டியால் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். நீண்ட நாள் செய்ய முடியாமல் கிடப்பில் போட்டு வைத்திருந்த வேலைகளை எடுத்து செய்து முடிப்பீர்கள். அரசாங்க வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. சில பேருக்கு நிதி பற்றாக்குறை வரலாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட தூர பயணங்களால் நன்மை உண்டாகும். புது அனுபவங்கள் கிடைக்கும். சில பேருக்கு வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

55 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0