உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 30.07.2026

ராசி பலன்கள் 2 மாதங்கள் முன்
155 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும். நீண்ட நாட்களாக நீங்கள் முயற்சி செய்த காரியங்கள் வெற்றி அடையும். காரிய தடை விலகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உடல் உபாதைகள் சரியாகும். வீண் விரைய செலவுகள் குறையும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உங்களை மீறி அதிகப்படியான கோபம் வெளிப்பட வாய்ப்பு உள்ளது. சண்டை சச்சரவுகள் எதிரி தொல்லை உருவாக வாய்ப்பு உள்ளது. மனதை ஒருநிலைப்படுத்துங்கள். இஷ்ட தெய்வ வழிபாடு செய்யுங்கள். கோபத்தை கட்டுப்படுத்தினால் இந்த நாள் இனிய நாளாக இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் கை கூடி வரும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். மனதிற்கு பிடித்த வாழ்க்கைத்துணை அமையும். ஆடி மாதம் முடிந்ததும் வீட்டில் கெட்டி மேலே சத்தம் கேட்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சீக்கிரம் நல்ல செய்தி கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்லது நடக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களைத் தேடி பெரிய பெரிய வாய்ப்புகள் வரப்போகிறது. வாய்ப்புகளை நல்லபடியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். புது முயற்சிகள் வெற்றி தரும். மன கசப்பு விலகும். மன நிம்மதியான நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக்கூடிய நாள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட தூர பயணங்களால் மன அமைதி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. உறவுகளோடு ஒற்றுமை உண்டாகும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி கிடைக்கும். எதிரி தொல்லை நீங்கும். நீண்ட நாள் மனதில் தேக்கி வைத்திருந்த பிரச்சினைகளை வெளியேற்றி விடுவீர்கள். சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். வேலையில் டென்ஷன் குறையும். வியாபாரத்தை பொறுத்தவரை நிதானத்தோடு இருக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். சுறுசுறுப்பு வெளிப்படும். நீண்ட நாட்களாக செய்யாமல் கிடப்பில் போட்டு வைத்திருந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வீட்டை சுத்தம் செய்யக்கூடிய வேலையில் ஆர்வம் அதிகரிக்கும். புத்துணர்ச்சியாக செயல்பட்டு இந்த நாளை நிறைவு ‌ செய்வீர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று உத்வேகம் அதிகரிக்கும். விவேகம் வெளிப்படும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்வீர்கள். ஒரு நிமிடம் கூட நேரத்தை வீணடிக்காமல் செயல்படுவீர்கள். இன்றைய நாளின் பயணம் வேகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் இருக்கட்டும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல இலாபம் கிடைக்கும். வருமானம் பெருகும் சமயத்தில் சேமிப்பை உயர்த்திக் கொள்வது புத்திசாலித்தனம். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். பகை விலகும். சுப செலவுகள் கொஞ்சம் ஏற்படும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். மனதில் நீண்ட நாட்களாக தேக்கி வைத்திருந்த ஆசைகள் நிறைவேற தொடங்கும். மாணவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய அக்கறை அதிகரிக்கும். சிந்தனை மேலோங்கும். எதிர்கால கனவு நிறைவேற, நீங்கள் இன்று மேற்கொள்ளும் முயற்சிகள் நல்லதொரு முன்னேற்ற பாதையை நோக்கி பயணம் செய்யும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு இருப்பீர்கள். தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். எந்த இடத்தில் விழுந்தீர்களோ, அந்த இடத்திலேயே எழுந்து நிற்கக்கூடிய சூழ்நிலையை இறைவன் உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பான். எதிரிகளுக்கு நல்ல பதிலடி கிடைக்கும். கர்வம் கொஞ்சம் அதிகரிக்கக் கூடிய நாளாகத்தான் இந்த நாள் அமையும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லதொரு ஆதரவு கிடைக்கும். உங்களுடைய வேலைகள் எல்லாம் சரியான நேரத்தில் நடந்து முடியும். சில பேருக்கு நீண்ட தூர பயணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பயணங்கள் இனிதாக நிறைவடையும். சுப செலவுகள் ஏற்படும். உறவுகளோடு ஒற்றுமை இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் வேலையில் நிம்மதி கிடைக்கும். ப்ரமோஷனுக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

55 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0