உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 25.07.2026

ராசி பலன்கள் 2 மாதங்கள் முன்
85 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். மனதிற்கு பிடித்த நபரை சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். பல நாள் பிரச்சினைகளுக்கு இன்று ஒரு நிரந்தர தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். அந்தந்த வேலைகள் அந்தந்த நேரத்தில் நடந்து முடியும். பெருசாக எந்த தொந்தரவும் இருக்காது. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு இலாபம் கிடைக்கும். வருமானம் பெருகும். வராத கடன் வசூல் ஆகும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த நாள் இனிய நாளாக அமையும். மனதிற்கு பிடித்த நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் பெருசாக டென்ஷன் இருக்காது. நேரத்தை வீணடிக்காமல் உங்களுடைய கடமையை செய்து முடிக்கும் பட்சத்தில், இந்த நாள் அமோகமான சந்தோஷத்தை கொடுக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். நேரத்தை வீணடிக்காமல் உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். சுறுசுறுப்பு வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பக்குவம் வெளிப்படும். மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் சில விஷயங்களை செய்வீர்கள். மனநிறைவை அடைவீர்கள். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். குழப்பத்திலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாள் தடைப்பட்டு கொண்டிருந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் வீட்டில் மீண்டும் தொடங்கும். உற்சாகம் பிறக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு விலகும். சொத்து சுகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டும். உடல் அசதி ஏற்பட வாய்ப்பு உள்ளது. வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உணவு பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. முடிந்தவரை வீட்டு உணவு சாப்பிடுவது நல்லது. மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் சமூகமாக செல்லும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று நிறைய விஷயங்களை சகித்துக் கொள்ள வேண்டும். இன்று தொந்தரவுகள், தொல்லைகள் வரக்கூடிய வாய்ப்புகள் கொஞ்சம் இருக்கு. கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டிய நாள். எதிரி பிரச்சினை, பஞ்சாயத்து இதுபோல விஷயங்களில் எல்லாம் கவனமாக பார்த்து நடந்து கொள்ளுங்கள். கூடுமானவரை நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். வாழ்க்கைக்கு தேவையான நிறைய நல்ல முடிவுகளை எடுக்கக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமையும். வேலையிலும் வியாபாரத்திலும் கவனமாக செயல்பட வேண்டும். அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது. குறிப்பாக இளைஞர்களுக்கு இன்று நிறைய நல்லது நடக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று திறமைசாலிகளாக வலம் வரப்போகிறீர்கள். ஆர்வத்தோடு இருப்பீர்கள். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். வசீகர தோற்றம், வசீகர பேச்சு உங்களை வாழ்க்கையில் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும். புது நண்பர்களின் அறிமுகம் புது அனுபவங்களை கற்றுக் கொடுக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம். இறைவனின் பரிபூரண அருளால் இந்த நாள் இனிய நாளாக அமையும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று புது அனுபவங்கள் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் புது வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். ப்ரமோஷனுக்கு முயற்சி செய்யலாம். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகளை மேற்கொள்ளலாம். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வீட்டிற்கு உண்டான தேவைகளை பார்த்து பார்த்து பூர்த்தி செய்வீர்கள். மனநிறைவு அடைவீர்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சின்னதாக மனக்கவலை கொஞ்சம் இருக்கும். வேலையில் முழு கவனம் செலுத்த முடியாது. வியாபாரத்தை கவனிக்க சின்னச் சின்ன தடைகள் வரலாம். புது முயற்சிகள் மேற்கொள்ளும் போது கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் சின்னச் சின்ன சண்டைகள் வந்து போக வாய்ப்பு உள்ளது. இறைவழிபாடு செய்யுங்கள் நிதானத்தோடு நடந்து கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். நல்ல சாப்பாடு கிடைக்கும். நல்ல தூக்கம் இருக்கும். குடும்பத்தோடு வெளி இடங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் இருக்கு. கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். மன நிம்மதி கிடைக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

55 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0