உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

டேவிட் வார்னருக்கு சிறை தண்டனை? – தீர்ப்பு விரைவில்

98 பார்வைகள்

அவுஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு 9 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டேவிட் வார்னர், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு அணி தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம், ஈஸ்டர் பண்டிகை அன்று, சிட்னியில் மது அருந்தி விட்டு டேவிட் வார்னர் காரை ஓட்டிச் சென்றார்.

போக்குவரத்து பொலிஸாரின் வழக்கமான சோதனையில் டேவிட் வார்னர், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகம் மது அருந்தியது உறுதியானது. இது தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, டேவிட் வார்னர் மது அருந்தியதை ஒப்புக் கொண்டதாக அவரது வழக்கறிஞர் ஹில் குறிப்பிட்டார்.

மேலும் தனது செயல் முட்டாள்தனமானது என்றும், மது அருந்தி விட்டு வாடகை காரில் செல்லாமல் தானே வாகனத்தை ஓட்டிச் சென்றது தவறு எனவும் டேவிட் வார்னர் ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஆகஸ்ட் 18 ஆம் திகதி தண்டனை விவரங்களை அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, டேவிட் வார்னருக்கு 9 மாதங்கள் சிறைத்தண்டனையும், 6 மாதங்கள் வாகனங்களை ஓட்டுவதற்கு தடையும், இந்திய ரூபாய் மதிப்பில் 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

35 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

15 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

14 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

32 0 0