உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
26 ஞாயிறு

23 ஆவது கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இன்று ஆரம்பம்!

35 பார்வைகள்

ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குப் பின்னர் உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வான 23வது கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இன்று (23) ஆரம்பமாகின்றன.

23வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இன்று முதல் ஆகஸ்ட் 02 வரை நடைபெறும்.

2014-க்குப் பின்னர் , ஸ்காட்லாந்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது இது இரண்டாவது முறையாகும்.

இந்த ஆண்டு, இப்போட்டியில் 74 நாடுகள் பங்கேற்கின்றன, இதில் கிட்டத்தட்ட 3,000 விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.

விளையாட்டுப் போட்டிகளின் செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டு விளையாட்டு நிகழ்வுகளின் எண்ணிக்கை 10 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், கிளாஸ்கோவிலிருந்து 8 மைல் சுற்றளவிற்குள் உள்ள நான்கு முக்கிய விளையாட்டு வளாகங்களில் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

23வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இலங்கை சார்பில் 40 விளையாட்டு வீரர்கள் ஏழு விளையாட்டுகளில் போட்டியிடுவார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

டேவிட் வார்னருக்கு சிறை தண்டனை? – தீர்ப்பு விரைவில்

அவுஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு 9 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டேவிட் வார்னர்,…

31 0 0
விளையாட்டுச் செய்திகள்

வலி மிகவும் அதிகமாக உள்ளது: இந்த வடு ஆற சிறிது காலம் எடுக்கும்!

உலக கிண்ண கால்பந்து இறுதிப் போட்டித் தோல்விக்குப் பின்னர் லியோனல் மெஸ்ஸி ரசிகர்களுக்கு உருக்கமான செய்தியை வெளியிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்…

84 0 0
விளையாட்டுச் செய்திகள்

நடப்பு சாம்பியனை வீழ்த்தி உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது ஸ்பெயின் கால்பந்து அணி!

23-வது பிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், 2-வது முறையாக சம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.…

51 0 0
விளையாட்டுச் செய்திகள்

2007 இல் இணைந்த ஜோடி இறுதிப் போட்டியில் எதிரும் புதிருமாக மோதுகிறது!

கால்பந்து கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ( 19) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி கால்பந்து வரலாற்றில் ஒரு மறக்க முடியாத தருணமாக அமையவுள்ளது. இந்த இறுதிப்போட்டியில்…

62 0 0