உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நடப்பு சாம்பியனை வீழ்த்தி உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது ஸ்பெயின் கால்பந்து அணி!

90 பார்வைகள்

23-வது பிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், 2-வது முறையாக சம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் நடப்பு சம்பியன் ஆர்ஜென்டினாவும், முன்னாள் சேம்பியன் ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்தின.

4-வது முறையாக கிண்ணத்தை வெல்லும் முனைப்பில் ஆர்ஜென்டினாவும், 2-வது முறையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றும் இலக்குடன் ஸ்பெயினும் களமிறங்கின.

போட்டி தொடங்கியதிலிருந்தே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. இருப்பினும் முதல் பாதியில் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை.

தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதியிலும் இரு அணிகளும் பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், அவற்றை கோலாக மாற்றத் தவறின.

இதனால் 90 நிமிடங்கள் முடிவில் ஆட்டம் கோல் இன்றி சமநிலையில் இருந்தது.

இதையடுத்து வழங்கப்பட்ட மேலதிக நேரத்தின் (90+3) போது ஆர்ஜெண்டினா வீரர் என்சோ பெர்னாண்டஸ் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார்.

இதனால், அந்த அணி மீதி ஆட்டத்தை 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து ஆட்டம் மேலும் 30 நிமிடங்களுக்கு சென்றது. மேலதிக நேரத்தின் போது ஸ்பெயின் வீரர் பெர்ரான் டோரஸ் அபாரமான கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று கொடுத்தார்.

இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டினாவை வீழ்த்திய ஸ்பெயின், 23-வது பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

அதன் பிறகு ஆர்ஜென்டினா சமநிலை கோலுக்காக கடுமையாக போராடிய போதிலும், ஸ்பெயின் வீரர்கள் சிறப்பாக தற்காப்பில் செயல்பட்டு முன்னிலையை தக்க வைத்தனர்.

2010-ம் ஆண்டு முதல்முறையாக சம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் தற்போது 16 ஆண்டுகளுக்கு பின்னர் 2-வது உலகக் கிண்ணத்தை வென்று அசத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

35 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

15 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

14 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

32 0 0