உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 20.07.2026

ராசி பலன்கள் 3 மாதங்கள் முன்
138 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். நிதி நிலைமை சீராகும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் மனக்கவலை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு கொஞ்சம் குறைவாக காணப்படும். ஆனால் பெரிதாக பிரச்சினைகள் வராது. மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். செலவுகளை குறைக்க வேண்டும். நேரத்தை வீணடிக்கக் கூடாது நிச்சயம் நல்லது நடக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷம் அன்பு, பாசம், காதல் வெளிப்படும் நாளாக இருக்கும். வீட்டில் தடைபட்டு வந்த சுப காரிய பேச்சுக்கள் மீண்டும் நமக்கும். ஆடி முடிந்து, ஆவணி மாதத்தில் கெட்டி மேள சத்தம் கேட்பதற்கு உண்டான அத்தனை நல்ல விஷயங்களும் நடக்கும். வேலை, வியாபாரம் எல்லாம் சீரான இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன மன குழப்பம் ஏற்படும். வாழ்க்கையின் முக்கியமான விஷயங்களுக்கு சரியான முடிவு எடுப்பதில் தடுமாற்றம் இருக்கும். மனது சலனமாக இருக்கும் போது புது முடிவுகளை எடுக்க வேண்டாம். பிரச்சினைகளை ஆற போடுங்கள். இறைவழிபாடு செய்யுங்கள். கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். உடன் வேலை செய்பவர்களால் நல்லது நடக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கூடுமானவரை கடன் கொடுக்கும் பழக்கத்தை குறைத்துக் கொள்ளுங்கள். நல்லது நடக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சின்னச் சின்ன ஏமாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புது முயற்சிகள் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத பிரச்சினையில் தலையிடக்கூடாது. முன்கோபம் வேண்டாம். புது மனிதர்களை முழுசாக நம்ப வேண்டாம். புதிய முதலீடுகளை செய்யாதீர்கள். யாரை நம்பியும் பணத்தை கடனாக கொடுக்காதீர்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ஆசைகள் நிறைவேறும் நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். இல்லத்தரசிகளுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு. தங்கம் வாங்கும் யோகமும் இருக்கிறது. அடமனத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கு உண்டான நல்ல காலம் கைகூடி வரும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் கவனம் தேவை. வேலையிலும் வியாபாரத்திலும் அலட்சியம் வேண்டாம். சக மனிதர்களிடம் பேசும் போது கவனமாக பேச வேண்டும். வார்த்தையில் கட்டுப்பாடு தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இன்று நீண்ட தூர பயணங்களை கூடுமானவரை குறைத்துக் கொள்ளுங்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு இருக்கும். ஆர்வம் அதிகரிக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். திறமை வெளிப்படும் நாள். வசீகரத் தோற்றத்தால், அனைவரது கவனத்தையும் உங்கள் பக்கம் ஈர்ப்பீர்கள். கலைஞர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் கிடைக்கும். கமிஷன் தொழில் நல்ல இலாபத்தை கொடுக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று போராடி தான் வெற்றி காண முடியும். ஒரு முயற்சியை கையில் எடுத்த உடனே வெற்றி அடைய முடியாது. சின்னச் சின்ன தோல்விகள் அனுபவத்தை கற்றுக் கொடுக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாத நண்பர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் சந்தோஷம் இரட்டிப்பாக கூடிய நாளாக இருக்கும். ப்ரோமோஷன் கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. வேலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும். வியாபாரத்தில் எதிர்பாராத இலாபம் உங்கள் கையை வந்து சேரும். புதிய ஒப்பந்தங்கள் கையொப்பம் ஆகும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு பாசம் காதல் வெளிப்படும் நாளாக இருக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுப செலவுகள் ஏற்படும்‌. வரக்கூடிய ஆவணியில் கெட்டி மேள சத்தம் கேட்பது உறுதி. குழந்தை பாக்கியம் தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு கூடிய விரைவில் நல்ல செய்தி கிடைக்கும். பயணங்களால் நன்மை நடக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

55 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0