உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

2007 இல் இணைந்த ஜோடி இறுதிப் போட்டியில் எதிரும் புதிருமாக மோதுகிறது!

159 பார்வைகள்

கால்பந்து கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ( 19) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி கால்பந்து வரலாற்றில் ஒரு மறக்க முடியாத தருணமாக அமையவுள்ளது.

இந்த இறுதிப்போட்டியில் நடப்பு செம்பியன் ஆர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டத்திற்கு முன்னதாக, சமூக வலைதளங்களில் ஒரு பழைய புகைப்படம் மீண்டும் வைரலாகி வருகின்றது.

19 ஆண்டுகளுக்கு முன்பு, இளம் வயது லியோனல் மெஸ்ஸி, ஒரு பச்சிளம் குழந்தையைக் குளிப்பாட்டும் அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் படத்தில் இருப்பது தற்போதைய ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரமான லமின் யமால் என்பதுதான் ஆச்சரியமான உண்மை.

இந்தச் சுவாரசியமான புகைப்படம் 2007-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்சிலோனா கால்பந்து கழகம் மற்றும் ‘ஸ்போர்ட்’ (Sport) உள்ளூர் நாளிதழ் இணைந்து ஒரு நாட்காட்டியைத் தயாரிப்பதற்காக இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் மூலம் திரட்டப்பட்ட நிதி, யுனிசெப் மற்றும் பிற தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

பார்சிலோனா அணியின் வீரர்களுடன் குழந்தைகளை வைத்து புகைப்படம் எடுப்பதே அந்தத் திட்டத்தின் நோக்கம். இதில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பங்கேற்றன.

அப்போதுதான் தனது கால்பந்து பயணத்தைத் தொடங்கிக் கொண்டிருந்த லியோனல் மெஸ்ஸியுடன், பச்சிளம் குழந்தையான லமின் யமால் புகைப்படம் எடுக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அன்று மெஸ்ஸியின் கைகளில் குளித்த அதே குழந்தை, இன்று கால்பந்து உலகின் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து, அதே மெஸ்ஸிக்கு எதிராக கால்பந்து கிண்ண இறுதிப்போட்டியில் களமிறங்குகிறது.

கால்பந்து உலகின் ‘தற்போதைய ஜாம்பவான்’ மற்றும் ‘எதிர்கால நட்சத்திரம்’ மோதிக்கொள்ளும் இந்தத் தருணத்தை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

3ஆம் நாள் ஆட்டம் நிறைவு: இலங்கை அணி 82 ஓட்டங்களால் முன்னிலை!

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து…

122 0 0
விளையாட்டுச் செய்திகள்

கால்பந்து வரலாற்றில் சர்வதேச மைல்கல்லைப் பதித்த டி.எப். சூடீன்!

90 ஆண்டுகளுக்கும் மேலான பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட நுவரெலியா கால்பந்து விளையாட்டுத் துறையில், இதுவரை எட்டப்படாத ஒரு சர்வதேச மைல்கல்லை நிலைநாட்டி, நுவரெலியா கால்பந்து சங்கத்தின் கீழ்…

127 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் விக்கெட் கீப்பர் லிட்டன்தாஸ் உலக சாதனை!

தென் ஆப்பிரிக்கா – பங்காளதேஷ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. பங்காளதேஷ் முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்களை குவித்தது. இதற்கு…

152 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெதுவான பந்துவீச்சு : இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு அபராதம்

ராவல்பிண்டியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் மெதுவாகப் பந்து வீசிய குற்றச்சாட்டில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது. இதற்கமைய, பாகிஸ்தான்…

92 0 0