இன்றைய ராசி பலன்கள் – 16.07.2026
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சினைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சரியாக தொடங்கும். மன நிம்மதியுடன் உங்களுடைய வேலையை கவனிப்பீர்கள். வியாபாரத்தில் முழு கவனத்தோடு இருங்கள். யாருக்கும் அனாவசியமாக கடன் கொடுக்காதீர்கள். மூன்றாவது நபர்களை முழுசாக நம்ப வேண்டாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று தெளிவாக சிந்திப்பீர்கள். வாழ்க்கைக்கு தேவையான முடிவுகளை மிக மிக தெளிவாக எடுப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுடைய கடமையை உணர்ந்து நடந்து கொள்வீர்கள். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். தேவைக்கு ஏற்ப அதை செலவு செய்வீர்கள். ஒரு நல்ல இன்பமான வாழ்க்கை இன்று உங்களுக்கு கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உபயோகமாக பல விஷயங்களை செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். வாழ்க்கைக்கு என்ன தேவை, என்ன தேவையில்லை என்பதை அலசி ஆராய்ந்து முடிவை எடுப்பதில் தெளிவு கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று வேகத்தோடும் விவேகத்தோடும் செயல்படுவீர்கள். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்களுடைய திறமையை வெளிப்படுத்துவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்வீர்கள். குடும்பத்திற்கு என்ன தேவை என்பதை புரிந்து செயல்படுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். வீட்டிற்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து பக்குவமாக செய்வீர்கள். தாய் தந்தையுடைய ஆசீர்வாதத்தோடு இந்த நாள் இனிமையான நாளாக அமையும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் இருக்கும். வேலையில் டென்ஷன் இருக்கும். வியாபாரத்தை பொறுத்தவரை பெருசாக இலாபம் கிடைக்காத சூழ்நிலை உண்டாகும். இந்த நாளை கடந்து செல்ல சில சிரமங்களை சந்திக்க வேண்டி இருக்கும். இறைவழிபாடு செய்யுங்கள். நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். லட்சுமி கடாட்சம் பெருகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். தனம் தானியம் கொழிக்க கூடிய இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இயலாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று பயணங்களால் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கூடுமானவரை உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் வரக்கூடிய பிரச்சினைகளை நிதானத்தோடு எதிர்கொள்ள வேண்டும். முன்கோபம் வேண்டாம். நிதானமாக இருந்தால் இந்த நாள் இனிய நாளாக அமையும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று எதிர்ப்புகள் போராட்டங்களை சந்திக்க கூடிய சூழ்நிலை இருக்கும். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம். தேவையில்லாத பஞ்சாயத்தில் தலையிடாதீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் இந்த நாள் நல்ல நாளாக அமையும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுடைய தேவையை பார்த்து பார்த்து பூர்த்தி செய்வீர்கள். மனநிறைவு அடைவீர்கள். வேலை வியாபாரம் எல்லாம் நீங்கள் நினைத்தபடி சுமூகமாக செல்லும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வருமானம் அதிகரிக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். கடன் சுமை குறையும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. கூடுமானவரை சேமிப்பை உயர்த்துவது நல்லது. பெண் பிள்ளைகளுடைய நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். சந்தோஷம் இரட்டிப்பாகும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். உங்களுடைய முயற்சிகள் வெற்றி அடையும். சுப செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத் துணையோடு நீண்ட நேரம், நேரத்தை செலவு செய்வீர்கள். குடும்பத்துக்காக இந்த நாளை செலவு செய்வதில் இரட்டிப்பு சந்தோஷம் வெளிப்படும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும். பெருசாக பாதிப்புகள் இருக்காது.