உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 14.07.2026

ராசி பலன்கள் 3 மாதங்கள் முன்
134 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று யோசனையை குறைத்துக் கொண்டு, வேலையில் முழு கவனத்தை செலுத்த வேண்டும். தேவையில்லாத சிந்தனையால் உங்களுடைய வேலை கெட்டுப் போக வாய்ப்பு உள்ளது. சொன்ன வேலையை சொன்ன நேரத்தில் முடித்துக் கொடுக்க முடியவில்லை என்றால், கெட்ட பெயர் வந்துவிடும். இந்த நாளை கவனமாக கடந்து செல்லுங்கள். சிந்தனையை சிதறவிட வேண்டாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை வெளிப்படும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். ஆசைகள் நிறைவேறும் நாள் இன்று.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மனது ஆர்வம் காட்டும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கஷ்டங்கள் விலகும் நாள். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு சரியாகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நீங்கள் எதிர்பார்த்தது முழுமையாக நடக்காது. இருந்தாலும் முயற்சிகளை கைவிடக் கூடாது. கவலைப்படக்கூடாது, உங்களுடைய வேலைகளை சரிவர செய்து முடிக்க வேண்டும். வேலைப்பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். உடல் சோர்வு ஏற்படும். இருப்பினும் உங்களுடைய உண்மையான முயற்சி ஒருபோதும் வீண் போகாது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன நிறைவான நாளாக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகமான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த சோம்பேறித்தனம் விலகும். வங்கி கடன் முயற்சி செய்யலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக சரியாகும். வீண்விரய செலவுகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத பண வரவு இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கையும் உண்டு. சொத்து சுகம் வாங்கக்கூடிய வாய்ப்புகளும் அமையும். பெண்களுக்கு இன்று இரட்டிப்பு சந்தோஷம் கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பெயர், புகழ், பாராட்டு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். எந்த இடத்தில் அவ பெயர் ஏற்பட்டதோ, அந்த இடத்தில் உங்களுக்கான நல்ல பெயரும் இன்று கிடைக்கும். சந்தேகங்கள் விலகும். வேலையிலும், வியாபாரத்திலும் உங்களுடைய கை ஓங்கி நிற்கும். மனநிம்மதி கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுகபோக வாழ்க்கை தான். எதிர்பார்க்காத நல்லது தானாக உங்களைத் தேடி வரும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறக்கூடிய இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். எதிரி தொல்லை விலகும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும். கடன் சுமை குறையும். நிதி நிலைமை சீராகும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கு முயற்சி செய்யுங்கள். நல்லது நடக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுபமான நாளாக இருக்கும். லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். நிறைய நல்ல விஷயங்கள் கைக்கூடி வரும். கை நழுவி செல்லக்கூடிய, நல்ல வாய்ப்புகள் கூட மீண்டும் உங்களை வந்து சேரும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய முயற்சிகள் வெற்றியைத் தரும். வாழ்க்கைத் துணையோடு இருந்து வந்த மனக்கசப்பு விலகும். குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். முயற்சிகள் வெற்றி தரும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

55 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0