உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ரஷ்யா மீதான தடையை நீக்கியது சர்வதேச ஒலிம்பிக் குழு!

65 பார்வைகள்

ரஷ்ய ஒலிம்பிக் குழு மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது

கடந்த 2022-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது படையெடுத்த ரஷ்யா அங்குள்ள சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

அத்துடன் தங்கள் ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைன் பிராந்தியங்களில் உள்ள ஒலிம்பிக் பேரவைகளையும் தங்கள் ஒலிம்பிக் குழுவுடன் இணைத்தது. இதையடுத்து 2023-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ரஷ்ய ஒலிம்பிக் குழுவுக்கு, சர்வதேச ஒலிம்பிக் குழு தடை விதித்தது.

இதனால் சர்வதேச ஒலிம்பிக் குழு நடத்தும் போட்டிகளில் ரஷ்ய வீரர்கள் நேரடியாக பங்கேற்பதில் சிக்கல் உருவானது.

2024-ஆம் ஆண்டு பெரிஸ் ஒலிம்பிக்கில் ரஷ்ய வீரர்கள் தங்கள் நாடு சார்பில் கலந்து கொள்ள முடியவில்லை.

அவர்கள் பொதுவான வீரர்கள் என்ற பெயரில் சர்வதேச ஒலிம்பிக் குழு கொடியின் கீழ் பங்கேற்றனர்.

இந்த நிலையில் ரஷ்ய ஒலிம்பிக் குழு மீதான தடை நீக்கப்பட்டு இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் குழு நேற்று அறிவித்தது.

இது குறித்து அதன் தலைவர் கிர்ஸ்டி கவென்ட்ரி கூறுகையில், ‘நாங்கள் எந்தவொரு போர் நடவடிக்கையையும் ஆதரிக்கவில்லை. லொஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் தொடங்குவதாலும், இந்த போட்டிகளில் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் சமமான வாய்ப்பை வழங்க வேண்டியது அவசியம் என்பதாலும் செயற்குழுவில் ரஷ்ய ஒலிம்பிக் குழு மீதான தடை நீக்கத்துக்கான முடிவு எடுக்கப்பட்டது.

விளையாட்டு வீரர்களை, அவர்கள் நாட்டு அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு பொறுப்பாக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

ரஷ்ய ஒலிம்பிக் குழு மீதான தடை தளர்த்தப்பட்டு இருப்பதால் அந்த நாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் அதிக அளவில் பங்கேற்க வழிவகை பிறந்துள்ளது.

அதேநேரத்தில் ரஷ்ய வீரர்கள் மீது நிறைய ஊக்கமருந்து சர்ச்சை இருப்பதால் அவர்களுக்கு கடுமையான ஊக்க மருந்து சோதனை நடைமுறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ரஷ்ய வீரர்கள் தங்கள் நாட்டு தேசிய கொடியின் கீழ் பங்கேற்பது குறித்தோ, போட்டிகளில் அந்த நாட்டு தேசிய கீதம் இசைக்கப்படுவது பற்றியோ இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

தடை நீக்கப்பட்டதை ரஷ்ய விளையாட்டு அமைச்சும் வரவேற்றுள்ளது. ஆனால் இந்த முடிவுக்கு உக்ரைன் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் குழு தடையை நீக்கி இருந்தாலும், தடகளம், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விளையாட்டு சம்மேளனங்கள் ரஷ்யாவை தங்களது போட்டிகளில் பங்கேற்க அனுமதிப்பதில்லை என்ற முடிவை மாற்ற வாய்ப்பில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

35 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

15 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

14 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

32 0 0