உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

உலகக்கிண்ண கால்பந்துத் தொடரில் அல்ஜீரியாவை வீழ்த்தி சுவிஸ்லாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

146 பார்வைகள்

உலகக்கிண்ண கால்பந்து தொடரின் 32 அணிகளுக்கான நொக்-அவுட் சுற்றில் அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணி அபார வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு (Round of 16) தகுதி பெற்றுள்ளது.

போட்டி தொடங்கிய 10ஆவது நிமிடத்திலேயே சுவிட்சர்லாந்து அணி தனது முதல் கோலை அடித்தது.

சக வீரர் ஜோஹான் மன்சாம்பி பாக்ஸுக்குள் வழங்கிய நேர்த்தியான பந்தை பிரீல் எம்போலோ (Breel Embolo) மிகச் சரியாக கோலாக மாற்றினார்.

இதனால் முதல் பாதியில் சுவிட்சர்லாந்து 1-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே சுவிட்சர்லாந்து தனது இரண்டாவது கோலை பதிவு செய்தது.

அல்ஜீரிய தற்காப்பு அரண் பந்தைத் தடுத்தாடத் தவறியதைச் சாதகமாக்கிக் கொண்ட டான் டோய் (Dan Ndoye) ஒரு சிறப்பான ஃபினிஷிங் மூலம் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

ஆட்டத்தின் முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் அல்ஜீரிய அணியின் இப்ராஹிம் மசாவுக்கு ஒரு சிறந்த கோல் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அவரது ஷூட் இலக்கைத் தவறவிட்டது.

இந்த வெற்றியின் மூலம் சுவிட்சர்லாந்து அணி கால்பந்து வரலாற்றில் தொடர்ந்து 4ஆவது முறையாக 16 அணிகளுக்கான சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

மேலும் இந்த தொடரில் இதுவரை விளையாடிய போட்டிகளில் தோல்வியடையாத அணியாகவும் தனது பயணத்தைத் தொடர்கிறது.
அடுத்த சுற்றில் கொலம்பியா அல்லது கானா ஆகிய அணிகளில் வெற்றி பெறும் அணியை சுவிட்சர்லாந்து எதிர்கொள்ளவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

3ஆம் நாள் ஆட்டம் நிறைவு: இலங்கை அணி 82 ஓட்டங்களால் முன்னிலை!

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து…

122 0 0
விளையாட்டுச் செய்திகள்

கால்பந்து வரலாற்றில் சர்வதேச மைல்கல்லைப் பதித்த டி.எப். சூடீன்!

90 ஆண்டுகளுக்கும் மேலான பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட நுவரெலியா கால்பந்து விளையாட்டுத் துறையில், இதுவரை எட்டப்படாத ஒரு சர்வதேச மைல்கல்லை நிலைநாட்டி, நுவரெலியா கால்பந்து சங்கத்தின் கீழ்…

127 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் விக்கெட் கீப்பர் லிட்டன்தாஸ் உலக சாதனை!

தென் ஆப்பிரிக்கா – பங்காளதேஷ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. பங்காளதேஷ் முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்களை குவித்தது. இதற்கு…

152 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெதுவான பந்துவீச்சு : இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு அபராதம்

ராவல்பிண்டியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் மெதுவாகப் பந்து வீசிய குற்றச்சாட்டில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது. இதற்கமைய, பாகிஸ்தான்…

92 0 0