உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரில் இருந்து வெளியேறியது ஜேர்மனி!

66 பார்வைகள்

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் வெளியேற்றுச் சுற்றில் (Knockout stage) பராகுவே அணியிடம் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, ஜேர்மனி அணி தொடரிலிருந்து வெளியேற நேரிட்டுள்ளது.

போட்டியின் 42ஆவது நிமிடத்தில் பராகுவே அணி சார்பாக ஜூலியோ என்சிசோ (Julio Enciso) ஒரு கோலை அடித்தார்.

அதனைத் தொடர்ந்து, 54ஆவது நிமிடத்தில் ஜேர்மனி அணி சார்பாக கை ஹாவர்ட்ஸ் (Kai Havertz) ஒரு கோலை அடித்தார்.

போட்டியின் முதல் 90 நிமிடங்களுக்குள் இரு அணிகளாலும் வெற்றி பெற முடியாததால், நடுவர்கள் மேலதிக நேரத்தை வழங்க நடவடிக்கை எடுத்தனர். இருப்பினும், அந்த நேரத்திலும் இரு அணிகளாலும் கோல் எதனையும் பெற முடியவில்லை.

இதனையடுத்து, போட்டியின் வெற்றியைத் தீர்மானிக்க நடுவர்கள் பெனால்டி (Penalty shootout) முறையை வழங்கினர்.

இதில் பராகுவே அணி ஐந்து பெனால்டி வாய்ப்புகளில் நான்கை வெற்றிகரமாகப் பயன்படுத்திய வேளையில், ஜேர்மனி அணியால் மூன்று பெனால்டி வாய்ப்புகளை மட்டுமே வெற்றிகரமாகப் பயன்படுத்த முடிந்தது.

இதன்படி, உலகத் தரவரிசையில் 10ஆவது இடத்தில் இருக்கும் ஜேர்மனி அணிக்கு, இம்முறை உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேற நேரிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடரில் பங்கேற்பதற்காக அந்தநாட்டை சென்றடைந்த இலங்கை T20 கிரிக்கெட் அணிக்கு இஸ்லாமாபாத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இஸ்லாமாபாத் வானூர்தி நிலையத்தை…

79 0 0
விளையாட்டுச் செய்திகள்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட்…

80 0 0
விளையாட்டுச் செய்திகள்

சீன பகிரங்க டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற சீன பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், ஜப்பானின் முன்னணி வீராங்கனையான நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு…

89 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டு விழா : ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தியது இந்தியா

ஆசிய விளையாட்டு விழாவின் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில், 124 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி,…

74 0 0