உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

புதுக்குடியிருப்பு குணா கலைக் கல்லூரியில் நடைபெற்ற மாணவர் மதிப்பளிப்பு நிகழ்வு; ரவிகரன் எம்.பி பங்கேற்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
84 பார்வைகள்

முல்லைத்தீவு – குணா கலைக் கல்லூரியின் பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மற்றும் அண்மையில் வெளியாகியுள்ள க.பொ.த சாதாரணதரப் பரீட்சை முடிவுகளின்படி சிறப்புச்சித்தி பெற்ற மாணவர்களையும் மதிப்பளிக்கும் நிகழ்வானது 20.06.2026 நேற்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.

இந்நிகழ்வானது விருந்தினர் மற்றும் சாதித்த மாணவர்கள் ஆகியோரது வரவேற்புடன் ஆரம்பமானது. அந்தவகையில் விருந்தினர்களும், சாதனை மாணவர்களும் மலர்மாலை அணிவிக்கப்பட்டு, தவில், நாதஸ்வர இசை முழக்கத்துடன் மலர்தூவி வரவேற்று அழைத்துவரப்பட்டனர்.

அதனையடுத்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதுடன், பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மற்றும் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சிறப்புச் சித்திபெற்ற மாணவர்களும் மதிப்பளிக்கப்பட்டனர். அதனையடுத்து விருந்தினர்களது உரை, மாணவர்களது கலை நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றன.

மேலும், இந்நிகழ்வில் விருந்தினர்களாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஓய்வுநிலை பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான ச.நாகரத்தினம், பொ.பேரின்பநாயகம், ஓய்வுநிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் சி.சுப்பிரமணியேஸ்வரன், ஓய்வுநிலை உள்நாட்டு இறைவரி ஆணையாளர் த.கோபலசிங்கம், ஓய்வுநிலை கமநல உதவி ஆணையாளர் தி.அமிர்தலிங்கம் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

83 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

88 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

69 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனைக் காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டவர் சிவராசா அனோஜனுக்கு உதவ இலங்கை அரசாங்கம் தனது சட்டரீதியான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது அங்குள்ள சட்டக் குழுவினர்…

75 0 0