உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

உலகக் கிண்ண கால்பந்து தொடரில் ஈக்குவடாரை சமன் செய்தது குரோசோ அணி!

92 பார்வைகள்

2026 பிஃபா உலகக் கிண்ண கால்பந்து திருவிழாவின் குரூப் ‘இ’ (Group E) பிரிவில் இன்று நடைபெற்ற விறுவிறுப்பான மற்றுமொரு லீக் ஆட்டத்தில், வலுவான ஈக்வடார் அணியை கோல் அடிக்கவிடாமல் தடுத்து நிறுத்தி பூஜ்ஜியம்-பூஜ்ஜியம் (0-0) என்ற கணக்கில் குராசோ (Curaçao) அணி வரலாற்றுச் சமன் செய்துள்ளது. உலகக் கிண்ண வரலாற்றில் குராசோ அணி பெறும் முதல் புள்ளி இதுவாகும்.

ஆட்டம் தொடங்கிய முதலே பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஈக்வடார் அணி, குராசோ கோல் போஸ்ட்டை நோக்கி 26 ஷாட்டுகளை அடித்தது. அதில் 15 ஷாட்டுகள் இலக்கை நோக்கி  பாய்ந்தன.

ஈக்வடாரின் அசுர வேகத் தாக்குதல்களை 75 சதவீத பந்து கட்டுப்பாட்டுடன்  எதிர்கொண்ட குராசோ அணி, மிகச் சிறந்த தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தைச் சமன் செய்தது.

ஆட்டத்தின் போது முரட்டுத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குராசோ வீரர்களுக்கு 5 மஞ்சள் அட்டைகளும், ஈக்வடார் வீரருக்கு 1 மஞ்சள் அட்டையும் நடுவரால் காண்பிக்கப்பட்டது.

இதேவேளை, இன்று இடம்பெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி அணி 2-1 என்ற கணக்கில் ஐவரி கோஸ்ட் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடரில் பங்கேற்பதற்காக அந்தநாட்டை சென்றடைந்த இலங்கை T20 கிரிக்கெட் அணிக்கு இஸ்லாமாபாத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இஸ்லாமாபாத் வானூர்தி நிலையத்தை…

79 0 0
விளையாட்டுச் செய்திகள்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட்…

80 0 0
விளையாட்டுச் செய்திகள்

சீன பகிரங்க டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற சீன பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், ஜப்பானின் முன்னணி வீராங்கனையான நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு…

89 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டு விழா : ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தியது இந்தியா

ஆசிய விளையாட்டு விழாவின் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில், 124 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி,…

74 0 0