உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

உலகக் கிண்ண கால்பந்து தொடரில் தென்கொரியாவை வீழ்த்தியது மெக்சிகோ!

33 பார்வைகள்

உலகக் கிண்ண கால்பந்து தொடரில் தென்கொரியாவை வீழ்த்தி மெக்சிகோ தனது பிரிவில் முதலாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதன்படி, குழு-ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள மெக்சிகோ மற்றும் தென்கொரியா அணிகள் குவாடலஜராவில் இன்று (19) மோதின.

போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின.

இருப்பினும், கிடைத்த வாய்ப்புகளை கோலாக மாற்ற தவறியதால் முதல் பாதியில் இரண்டு அணிகளும் எவ்வித கோலையும் பெறவில்லை.

இதையடுத்து தொடங்கிய 2-வது பாதியில் மெக்சிகோ அணி ஆதிக்கம் செலுத்தியது.

ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் லூயிஸ் ரோமோ கோல் அடித்து அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற செய்தார்.

கோல் கணக்கில் பின்தங்கிய தென்கொரியா அணி ஆட்டத்திற்குள் மீண்டும் வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.

ஆனால் மெக்சிகோ வீரர்களின் சிறப்பான தற்காப்பு ஆட்டத்தால் அந்த அணியால் சமநிலை கோலை அடிக்க முடியவில்லை.

இறுதியில் ஆட்ட நேர முடிவில் மெக்சிகோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 2-வது வெற்றியை பதிவு செய்த மெக்சிகோ, குரூப்-ஏ பிரிவு புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

தொழில்முறை காற்பந்து வாழ்வுக்கு இந்த வருடத்துடன் முடிவு!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமீபத்திய பேட்டி கால்பந்து உலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமது நீண்ட கால தோழியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸுடன்…

61 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கை தொடருக்கு முன்னர் சர்ஃபராஸ் கானுக்கு முடி வெட்டிவிட்ட முகமது சிராஜ்: வைரலாகும் காணொளி

இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி…

57 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!

ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி (Jorge Messi) காலமானதை அடுத்து, அவரது நெருங்கிய நண்பரும் சக வீரருமான ரொட்ரிகோ…

92 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது தாக்குதல்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் மகுரா பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீது நேற்று (5) மாலை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல்…

90 0 0