உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

உலகக் கிண்ண கால்பந்து தொடரில் அல்ஜீரியாவை வீழ்த்தியது அர்ஜென்டினா

107 பார்வைகள்

2026 ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்து திருவிழாவின் குரூப் ‘ஜே’ (Group J) லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டீனா அணி, அல்ஜீரியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தொடரை வெற்றியோடு தொடங்கியுள்ளது.

இந்த போட்டியில் அர்ஜென்டீனாவின் நட்சத்திர வீரர் அணித்தலைவர் லியோனல் மெஸ்ஸி ஹெட்ரிக் கோல் அடித்து அசத்தலான சாதனையைப் படைத்துள்ளார்.

கான்சாஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தின் தொடக்கம் முதலே அர்ஜென்டீனா அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் மெஸ்ஸி தனது முதல் கோலை அடித்து அணிக்கு முன்னிலை தேடித்தந்தார்.

இதனைத் தொடர்ந்து, அல்ஜீரிய அணியினர் பதிலடி கொடுக்க முயன்றபோதிலும், அர்ஜென்டீனாவின் பலமான தடுப்பாட்டத்தை அவர்களால் மீற முடியவில்லை. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் முழு வீச்சில் விளையாடிய மெஸ்ஸி, 60-வது மற்றும் 76-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்களை அடித்து தனது ஹெட்ரிக் சாதனையைப் பதிவு செய்தார்.

முடிவில், அர்ஜென்டீனா 3-0 என்ற கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்தி 3 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

உலகக் கோப்பை வரலாற்றில் மெஸ்ஸியின் இந்த அதிரடி ஆட்டம் அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

3ஆம் நாள் ஆட்டம் நிறைவு: இலங்கை அணி 82 ஓட்டங்களால் முன்னிலை!

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து…

122 0 0
விளையாட்டுச் செய்திகள்

கால்பந்து வரலாற்றில் சர்வதேச மைல்கல்லைப் பதித்த டி.எப். சூடீன்!

90 ஆண்டுகளுக்கும் மேலான பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட நுவரெலியா கால்பந்து விளையாட்டுத் துறையில், இதுவரை எட்டப்படாத ஒரு சர்வதேச மைல்கல்லை நிலைநாட்டி, நுவரெலியா கால்பந்து சங்கத்தின் கீழ்…

127 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் விக்கெட் கீப்பர் லிட்டன்தாஸ் உலக சாதனை!

தென் ஆப்பிரிக்கா – பங்காளதேஷ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. பங்காளதேஷ் முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்களை குவித்தது. இதற்கு…

152 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெதுவான பந்துவீச்சு : இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு அபராதம்

ராவல்பிண்டியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் மெதுவாகப் பந்து வீசிய குற்றச்சாட்டில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது. இதற்கமைய, பாகிஸ்தான்…

92 0 0