உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 14.06.2026

ராசி பலன்கள் 4 மாதங்கள் முன்
52 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் மனது ஈடுபடும். மனதில் குழப்பங்கள் தீரும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இரட்டிப்பாகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். கடன் சுமை குறையும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். காரிய தடை விலகும். விநாயகர் வழிபாடு செய்வது நன்மையை தரும். வேலையிலும் வியாபாரத்திலும் புது வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தேவையற்ற சிக்கல்கள் தானாக விளக்கும். எதிரி தொல்லை நீங்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். இறைவழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பொதுப் பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். வண்டி வாகனங்கள் ஓட்டும்போது கூடுதல் கவனம் இருக்கட்டும்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சந்தோசம் இரட்டிப்பாகும். உங்களுடைய வேலைகளை சுறுசுறுப்பாக செய்வீர்கள். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். உற்றார் உறவினரோடு இருந்து வந்த மனக்கசப்பு விலகும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். திறமையாக சிந்தித்து செயல்படுவீர்கள். நல்ல பெயர் எடுப்பீர்கள். நீண்ட நாள் கனவு நனவாகும். இறை வழிபாடு மனதிற்கு அமைதியை தரும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு நிலைமை சீராகும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வீண் விரைய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். ஆடம்பரமான பொருட்களை வாங்க வேண்டாம். நீண்ட தூர பயணங்கள் இருந்தால் உடைமைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். எல்லா விஷயங்களையும் சுலபமாக கற்று தேர்ச்சி பெறுவீர்கள். தேவையில்லாத எதிரி தொல்லை விலகும். வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுடைய ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு, பாசம், காதல் வெளிப்படும் நாளாக இருக்கும். உறவுகளோடு இருந்து வந்த மனகசப்பு விலகும். எதிரி தொல்லை விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். வேலையில் சின்ன பின்னடைவு வரலாம். உயர் அதிகாரிகளோடு அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று இலாப நஷ்ட கணக்கு பார்த்து வேலை செய்வீர்கள். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். நீண்ட தூர பயணங்களால் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உணவு பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த நஷ்டங்கள் சரியாகும். நீண்ட தூர பயணங்களால் நன்மை இருக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வுக்கான முயற்சிகள் வெற்றி தரும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரும். உங்களுடைய தேவைகள் பூர்த்தியாகும். உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு நல்ல ஆதாயம் உண்டு. ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். நீண்ட தூர பயணங்களால் கொஞ்சம் உடல் ஆரோக்கியம் கெட்டுப் போக வாய்ப்பு உள்ளது. உணவு பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று அமைதியாக இருக்க வேண்டும். ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது. நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். உயர் அதிகாரிகளோடு பேசும்போது அனுசரணை தேவை. முன்கோபம் வேண்டாம். இறை வழிபாடு செய்வது நன்மையை தரும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

64 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

59 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0