உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2026

ராசி பலன்கள் 4 மாதங்கள் முன்
46 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். முக்கியமான வேலைகள் ஏதாவது இருந்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே, குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டும். தாமதத்தால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களை அனாவசியமாக மூன்றாவது நபரிடம் சொல்ல வேண்டாம். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம். விட்டுக் கொடுத்தால் நல்லதே நடக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஆதாயம் இல்லாமல் ஒரு வேலையை கையில் எடுக்க மாட்டீர்கள். இலாப நஷ்ட கணக்கு பார்த்து செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் திறமையாக செயல்படுவீர்கள். நிதி நிலைமை சீராக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். கடன் சுமை குறையும். மன நிம்மதி கிடைக்கும் நாள் இன்று.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று வேலையில் கவனத்தோடு செயல்பட வேண்டும். தேவையில்லாத சிந்தனைகளை ஒதுக்கி வைப்பது நல்லது. மூன்றாவது நபர்களை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். உங்களுடைய பொறுப்புகளை கடமைகளை அடுத்தவர்கள் கையில் நம்பி ஒப்படைக்க வேண்டாம். முக்கியமான பொருட்களை கவனத்தோடு பார்த்துக் கொள்ளுங்கள். திருட்டு போவதற்கு வாய்ப்பு உள்ளது.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று வேலைப் பளு அதிகமாக இருக்கும். உழைப்பு உழைப்பு என்று இந்த நாள் வேகமாக ஓடிவிடும். நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை சாப்பிட்டுவிட்டு, கடமையை செய்யுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கூடுமானவரை செலவுகளை குறைத்துக் கொள்வது, எதிர்காலத்திற்கு நல்லது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மனநிறைவான நாளாக இருக்கும். உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். தக்க சமயத்தில் தக்க உதவி கிடைக்கும். இறை வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று அளவோடு ஆசைப்பட வேண்டும். பேராசை பெரு நஷ்டத்தை உண்டு பண்ணிவிடும். அடுத்தவர்களை பார்த்து உங்களுடைய வாழ்க்கையை வாழாதீர்கள். உங்களுடைய திறமை, உங்களுடைய சக்தி என்ன என்பதை புரிந்து கொண்டு வாழ்வது சிறப்பான பலனைத் தரும். ஆடம்பரத்தை குறைத்தால் இந்த நாள் இனிய நாளாக அமையும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சோர்வாக காணப்படுவீர்கள். நீண்ட தூர பயணங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பயணங்களை தவிர்க்க முடியாது என்றால் பயணத்தின் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வண்டி வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று காரிய வெற்றி கிடைக்கும். வேகத்தோடு சேர்த்து விவேகமாக செயல்படுவீர்கள். திறமை வெளிப்படும் நாள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. தன்னம்பிக்கையும் தைரியமும் உயரும். உயர் பதவிகள் கிடைக்க நிறைய வாய்ப்பு உள்ளது. சாதனை படைக்கக்கூடிய இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று சந்தோஷமாக இருப்பீர்கள். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவு ஏற்படும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்திப்பீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமாவது ஏமாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. பணப்பரிவர்த்தனையில் கூடுதல் கவனம் தேவை. முன்பின் தெரியாதவர்களுக்கு கடன் கொடுக்காதீங்க. டிஸ்கவுண்ட் சேல் என்று நம்பி நிறைய பணம் கொடுத்து பொருட்களை வாங்காதீர்கள் உஷாரா இருங்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று வெற்றி காண்பீர்கள். சாதனை படைக்கக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றி தரும். கடன் சுமை குறையும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்க நல்ல நேரம் கைகூடி வரும். சொத்து பிரச்சினைகள் சரியாகும். மன நிம்மதி கிடைக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. கூடுமானவரை பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். அலைச்சல் இல்லாமல் வேலை செய்வது நல்லது. தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வண்டி வாகனம் ஓட்டும் போது கவனம் இருக்கட்டும். வாழ்க்கை துணையோடு வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

64 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

59 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0