கம்பஹா மாவட்டம், மீரிகமை பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி 26 வயதுடைய இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சோகச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
மீரிகமை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மீரிகமை பகுதியில் நேற்று இரவு இரண்டு முச்சக்கரவண்டிகள் எதிரெதிர் திசையில் பயணித்தபோது, எதிர்பாராதவிதமாக ஒன்றோடொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தின் காரணமாக ஒரு முச்சக்கரவண்டியின் சாரதியான 26 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, மற்றைய முச்சக்கரவண்டியைச் செலுத்திய 31 வயதுடைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு முச்சக்கரவண்டிகளிலும் சாரதிகளைத் தவிர வேறு எவரும் பயணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










