உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 05.06.2026

ராசி பலன்கள் 4 மாதங்கள் முன்
70 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பமான சூழ்நிலை இருக்கும். எந்த பிரச்சினைக்கும் தெளிவான முடிவை எடுக்க முடியாது. சிந்தித்து செயல்பட வேண்டும். அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு முடிவு எடுக்கவும். கூடுமானவரை புது முயற்சிகளை நாளை தள்ளிப் போடுவது நல்லது. இறை வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பக்குவத்தை பெற்றிருப்பீர்கள். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வீட்டிற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சீரான போக்கு நிலவும். பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். நிறைய வேலைப்பளுவை இழுத்து தலை மேல் போட்டுக் கொள்ள வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும். ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிடுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கவனத்தோடு செயல்படுங்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன கவலையான நாளாக தான் இருக்கும். மனக்குழப்பம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் பின்தங்கிய நிலை காணப்படும். இருப்பினும் மனம் தளராமல் விடா முயற்சியை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். நேரத்தை வீணடிக்காதீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷத்திற்கு அளவிருக்காது. நீங்கள் எதிர்பார்த்த நல்லது, எதிர்பார்க்காத நல்லது என்று நிறைய நன்மைகள் உங்களைத் தேடி வர போகிறது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் கையை வந்து சேரும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று துணிச்சலோடு செயல்படுவீர்கள். வீரம் வெளிப்படும். இத்தனை நாள் மனதில் தேக்கி வைத்திருந்த விஷயங்களை வெளிப்படுத்தி, பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். நல்லதே நடக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று கவனத்தோடு செயல்பட வேண்டும். மனதிற்கு பிடித்தவர்களோடு சண்டை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மனக் கவலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிரச்சினைகள் வந்தாலும் அதை துணிச்சலோடு எதிர்கொள்ளுங்கள். துவண்டு போய் உட்கார வேண்டாம். இறை வழிபாடு செய்யுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டின் மூலம் மனநிறைவு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு. வண்டி வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல விஷயங்கள் கைகூடிவரும். வீட்டில் தடைபட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வங்கி கடன் கிடைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் டென்ஷனாக இருக்க போறீங்க. முன்கோபம் கொஞ்சம் அதிகமாக வரும். உங்களுடனே இருந்து உங்களை பார்த்து பழகுபவர்களுக்கு கூட, கொஞ்சம் பயம் அதிகமாக இருக்கும். கவனமாக செயல்பட வேண்டும். எந்த இடத்தில் கோபத்தை காட்ட வேண்டும், எந்த இடத்தில் கோபத்தை காட்டக்கூடாது என்பதையும் புரிந்து நடந்து கொள்ளுங்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். பயணங்களால் நன்மை உண்டு. பிரிந்த உறவுகளை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். மன நிம்மதி பெறக்கூடிய நாள் இன்று.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சினைகள் விலகும். நீண்ட தூர பயணங்களால் நன்மை உண்டு. வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நிதிநிலைமை கொஞ்சம் மோசமாகும். தேவையில்லாத செலவை குறைத்துக் கொள்ளுங்கள். நல்லது நடக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

64 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

59 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0