உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

RCB அணியின் நட்சத்திர வீரர் டிம் டேவிட் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

92 பார்வைகள்

2026 இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியின் போது நடுவர் நிதின் மேனன் மீது ஐஸ் பையை வீசியதற்காக ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் டிம் டேவிட் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

போட்டியின் 10 ஆவது ஓவரில் விக்கெட்டை இழந்த விரக்தியில் இருந்த டிம் டேவிட், நடுவர் நிதின் மேனனை நோக்கி ஐஸ் பையை வீசினார்.

ஐபிஎல் நடத்தை விதிகளின்படி இது லெவல் 1 குற்றமாக கருதப்பட்டு, அவருக்கு 50 சதவீதம் போட்டி கட்டணம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவருக்கு 2 குறைமதிப்பு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த சீசனில் டிம் டேவிட் செய்த மூன்றாவது லெவல்-1 விதிமீறல் இதுவாகும்.

ஏற்கனவே லீக் கட்டத்தின் 20 ஆவது மற்றும் 54 ஆவது போட்டிகளில் அவர் குறைமதிப்பு புள்ளிகளை பெற்றிருந்தார்.

இறுதிப்போட்டியில் கிடைத்த 2 புள்ளிகளுடன் சேர்த்து அவரது மொத்த குறைமதிப்பு புள்ளிகள் 5 ஆக உயர்ந்தன.

ஐபிஎல் ஒழுங்கு விதிகளின்படி 5 குறைமதிப்பு புள்ளிகளை எட்டும் வீரருக்கு தானாகவே ஒரு போட்டி தடை விதிக்கப்படும்.

அதன்படி டிம் டேவிட் அடுத்த ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

2026 ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்ற மகிழ்ச்சியில் இருந்த பெங்களூரு ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடரில் பங்கேற்பதற்காக அந்தநாட்டை சென்றடைந்த இலங்கை T20 கிரிக்கெட் அணிக்கு இஸ்லாமாபாத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இஸ்லாமாபாத் வானூர்தி நிலையத்தை…

79 0 0
விளையாட்டுச் செய்திகள்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட்…

80 0 0
விளையாட்டுச் செய்திகள்

சீன பகிரங்க டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற சீன பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், ஜப்பானின் முன்னணி வீராங்கனையான நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு…

89 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டு விழா : ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தியது இந்தியா

ஆசிய விளையாட்டு விழாவின் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில், 124 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி,…

74 0 0