உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தவிசாளரின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு விவகாரம்; ஊடகவியலாளர் பாலநாதன் சதீசனிடம் தீவிர விசாரணை.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
76 பார்வைகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு ஊடகங்களில் வெளியானமை தொடர்பில், ஊடகவியலாளர் பாலநாதன் சதீசனிடம் முல்லைத்தீவு பொலிஸார் நேற்றையதினம் (29) மீண்டும் ஒரு மணிநேர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவை ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறி, முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன் மீது முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் கடந்த 27 ஆம் திகதி அவர் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

எனினும், அன்றையதினம் முறைப்பாட்டாளரான தவிசாளர் பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளிக்காத காரணத்தினால், மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக மீண்டும் நேற்றையதினம் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

குறித்த விசாரணைகள் முல்லைத்தீவு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் நேற்றையதினம் இடம்பெற்றதுடன், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரும் அதில் பிரசன்னமாகியிருந்தார்.

இதன்போது, குறித்த குரல் பதிவு எவ்வாறு உங்களுக்குக் கிடைத்தது?, செய்தியால் மன உளைச்சலுக்கு உள்ளாவதாகவும், இனிமேல் இவ்வாறான செய்திகளை போட வேண்டாம் என்றும், போடப்பட்ட செய்தியை இல்லாது செய்யுமாறும் பொலிஸாரிடம் தவிசாளர் கூறியிருந்தார். இவ்வாறு செய்திகள் இனி வெளிவருமாக இருந்தால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என பொலிஸார் இதன்போது தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த ஊடகவியலாளர் இது தனிநபர்கள் சார்ந்த உரையாடல் அல்ல. பிரதேச சபையின் முன்னாள் செயலாளருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல் தொடர்பான உரையாடல். மேலும் குறித்த தவிசாளரே இந்த உரையாடலை வட்சப் குழுவொன்றிலும் பகிர்ந்திருந்தார் என தெரிவித்தார்.

இவ்வாறான விவகாரங்களை பொலிஸார் நேரடியாக நீதிமன்றில் முற்படுத்த முடியாது. எனவே, தேவையெனில் சிவில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்யுமாறு தவிசாளருக்கு அறிவுறுத்தியதையடுத்து விசாரணைகள் நிறைவுக்கு வந்தன.

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் செயலாளரின் இடமாற்றம் அரசியல் பழிவாங்கலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் தவிசாளரும், சபை உறுப்பினர் ஒருவரும் இடையே இடம்பெற்றதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பொதுமக்களுக்கு உண்மைத்தன்மைகளை வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்கள் மீது இவ்வாறான விசாரணைகள் மற்றும் அழுத்தங்கள் மேற்கொள்ளப்படுவது, ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என ஊடக வட்டாரங்கள் கவலை வெளியிட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

83 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

88 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

69 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனைக் காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டவர் சிவராசா அனோஜனுக்கு உதவ இலங்கை அரசாங்கம் தனது சட்டரீதியான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது அங்குள்ள சட்டக் குழுவினர்…

75 0 0