மொனராகலை – சியம்பலாண்டுவ பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 26 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மொனராகலையிலிருந்து கொட்டியாகலை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இ.போ.ச. பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பேருந்து மொனராகலை – சியம்பலாண்டுவ பிரதான வீதியின் 31ஆம் கட்டை சந்தி பகுதியைச் சென்றடைந்தபோது, திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
இதனால் வேகம் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தக் கொடூர விபத்தின் போது பேருந்தில் பயணித்த 26 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
விபத்து நடந்தவுடனே அப்பகுதி மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு, அவசர சிகிச்சைக்காக அருகில் உள்ள மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.










