உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 29.05.2026

ராசி பலன்கள் 4 மாதங்கள் முன்
49 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். மகிழ்ச்சி இரட்டிப்பாகும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நீண்ட நாள் மனதில் ஒட்டிக்கொண்டிருந்த கவலை விலகும். பகை விலகும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு நீங்கும். பல பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். கடன் சுமை குறையும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று மனம் தளராமல் நடந்து கொள்ள வேண்டும். வரக்கூடிய பிரச்சினைகளை எதிர்த்துப் போராடும் தைரியம் வெளிப்பட வேண்டும். கோழையாக இருக்கக் கூடாது. துணிந்து செயல்பட்டால் நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். எவ்வளவு பிரச்சினை வந்தாலும் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். பொய் பேசாதீர்கள். இறை வழிபாடு செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். வருமானம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். ‌

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம், பதட்டம் இருக்கும். வேலைகளை குறித்த நேரத்தில் முடித்து தர முடியுமா என்ற சந்தேகம் எழும். நம்பிக்கையை கைவிடக்கூடாது. நேரத்தை வீணடிக்க கூடாது. நிச்சயம் நல்லது நடக்கும். இறை வழிபாடு செய்யுங்கள். கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். எந்த விஷயத்திற்கும் அவசரப்படக்கூடாது. புது முடிவுகளை எடுக்கும் போது, ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுங்கள். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. எதிரிகளிடம் கூட இன்று கோபப்படக்கூடாது. நிதானமாக இருந்தால் நல்லது நடக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். பிள்ளைகளுக்கு தங்க நகை வாங்குவது, எதிர்கால சேமிப்பு திட்டம் போடுவது இதுபோன்ற நல்ல விஷயங்களை செய்தால், இலாபம் இரட்டிப்பாகும். நீண்ட தூர பயணங்களால் நன்மை உண்டு. சுப செலவுகள் ஏற்படும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கப் போகிறது. பெரிய ஆர்ப்பாட்டம் எதுவும் இருக்காது. குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் பிரச்சினையாக இருந்து வந்த விஷயங்கள் விலகும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் என்று இந்த நாள் சுகபோக வாழ்க்கையை கொடுக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் புது அனுபவத்தை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு, எதிர்பாராத பரிசு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று நிதானமாக நடக்க வேண்டும். முன்கோபத்தால் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கிறது, சில நல்ல விஷயங்கள் கூட உங்கள் கை விட்டுப் போகலாம். நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். கோபம் வேண்டாம். அனாவசியமாக பேசாதீர்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல விஷயங்கள் கைக்கூடி வரும். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் நீங்கள் எதிர்பார்த்த நல்லது நடக்கும். புது மனிதர்களின் அனுபவம், புது அனுபவத்தை கொடுக்கும். வராத கடன் வசூல் ஆகும். நிதி நிலைமை சீராகும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் அசதி இருக்கும். வெளியூர் பயணங்கள் ஏற்படும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. உணவு பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் தேவை.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் சிரமங்கள் வரலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வாழ்க்கை துணை பேச்சை கேட்டு நடக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேற குறுக்கு பாதையை தேர்ந்தெடுக்காதீர்கள். பொய் சொல்லாதீர்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

64 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

59 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0