• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தற்போதய அரசால் மலையகத்திற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் தேர்தல் விளம்பரங்களே – சஜித் சாடல்!

selvan by selvan
May 23, 2026
in இலங்கை செய்திகள்.
0
தற்போதய அரசால் மலையகத்திற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் தேர்தல் விளம்பரங்களே – சஜித் சாடல்!
Share on FacebookShare on Twitter

தற்போதைய அரசின் கீழ் மலையக மக்களின் வாழ்க்கை முற்றாகப் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையாகச் சாடியுள்ளார்.

அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் தேர்தல் விளம்பரங்களாகவே சுருங்கிவிட்டன என்றும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மலையக சமூகம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“தேர்தல் காலத்தில் மலையக மக்களுக்காகத் தனிப்பட்ட அறிவிப்புகளை வெளியிட்ட தற்போதைய அரசு, இன்று அவர்களைப் பாதுகாப்பற்ற நிலைக்கு ஆளாக்கியுள்ளது.

நீலகாமம் தோட்டத்தில் அண்மையில் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் சம்பவத்தைப் பார்க்கும்போது, இந்த அரசின் கீழ் மலையக மக்களுக்குப் பாதுகாப்பு இருக்கின்றதா என்ற பலத்த கேள்வி எழுகின்றது.

மிகச் சாதாரண உரிமையான தாக்குதல்களுக்கு உள்ளாகாமல் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதில் இந்த அரசு முற்றாகத் தோல்வியடைந்துள்ளது.

அண்மையில் வீசிய ‘டித்வா’ சூறாவளியால் மலையகப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மக்கள் வீடுகளை இழந்து இடைத்தங்கல் முகாம்களில் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தனர்.

மஸ்கெலியா தோட்டத்தில் மட்டும் சுமார் 40 குடும்பங்களின் வீடுகள் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்பட்ட 50 இலட்சம் மற்றும் 100 இலட்சம் ரூபா நிவாரண நிதிகள் இதுவரை மக்களுக்குச் சென்றடையவில்லை.

2026 மார்ச் மாதம் ஜனாதிபதி இது குறித்து ஒருங்கிணைந்த அறிக்கையொன்றை வெளியிட்ட போதிலும், அடிமட்டத்தில் இன்னும் 50 இலட்சம் ரூபா நிவாரணம்கூடப் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கவில்லை.

அத்துடன், சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளைக்கூடப் புனரமைக்க அரசு தவறிவிட்டது.

அரசின் மீதான அதிருப்தி காரணமாகவே, கடந்த 2026 ஜனவரி 15 ஆம் திகதியன்று மலையக மக்கள் “உரிமைகளுக்கான பொங்கல்” என்ற முழக்கத்துடன் வீதிகளில் இறங்கிப் போராடினார்கள்.

லயன் அறைகளுக்குப் பதிலாக, தமக்குச் சொந்தக் காணியில் வீட்டுரிமை வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது.

தேசிய தேயிலை உற்பத்தியில் 40 வீத பங்களிப்பை வழங்கும் சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களே அதிக உற்பத்தியைத் தருகின்றனர்.

ஆனால், பெருமளவிலான தேயிலைக் காணிகளைத் தம்வசம் வைத்துள்ள பெரிய நிறுவனங்கள் மிகக் குறைந்த பங்களிப்பையே வழங்குகின்றன.

எனவே, இந்த நிறுவனங்களின் வசம் பயிரிடப்படாமல் கைவிடப்பட்டுள்ள பெருமளவிலான காணிகளை மீளக் கையகப்படுத்தி, அவற்றை மலையகச் சமூகத்தினருக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும்.

மலையகப் பகுதிகளில் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள் மிக மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளன.

மலையகக் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் மத்தியில் நிலவும் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்க அரசு உடனடியாகத் தலையிட வேண்டும்.

முறையான சமூக நலன்புரி திட்டங்கள் ஊடாக இந்த மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தி, அவர்களின் சமூக அந்தஸ்தை உயர்த்த வேண்டும்.

நாட்டுக்குப் பில்லியன் கணக்கான டொலர்களைத் தேடித்தரும் இந்த உழைப்பாளர் சமூகத்துக்காக, வெறும் வெற்று அறிக்கைகளை மட்டும் வெளியிடாமல், இதயசுத்தியுடன் அரசு கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் சஜித் பிரேமதாஸ சபையில் தெரிவித்தார்.

Related Posts

விபத்தில் சிக்கி இளைஞன் படுகாயம்.!

விபத்தில் சிக்கி இளைஞன் படுகாயம்.!

by Mathavi
June 10, 2026
0

வவுனியா, மன்னார் வீதி நெளுக்குளம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில பொலிஸார்...

செம்மணிப் புதைகுழியில் இதுவரை 327 எலும்புக்கூடுகள் அடையாளம்.!

செம்மணிப் புதைகுழியில் இதுவரை 327 எலும்புக்கூடுகள் அடையாளம்.!

by Mathavi
June 10, 2026
0

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய (09) அகழ்வாராய்ச்சிப் பணிகளின் போது, பச்சிளம் சிசு மற்றும் சிறுவர்களுடையது என அடையாளம் காணப்பட்ட 8...

தேசிய மக்கள் சக்தி அரசுக்குள்ளும் கோமாளிகள்.!

தேசிய மக்கள் சக்தி அரசுக்குள்ளும் கோமாளிகள்.!

by Mathavi
June 10, 2026
0

"தங்களின் அரசு வீழ்ச்சியடையப் போகின்றது என்று தெரிந்தும், தங்களை மாபெரும் பலசாலிகள் எனக் கூறிக்கொண்டு நாடாளுமன்றிலும் வெளியிலும் வீணாகக் கூச்சலிடும் கோமாளிகளாலேயே கடந்த காலங்களில் ஆட்சிகள் கவிழ்ந்தன"...

ஒட்டுமொத்த மக்களும் வீதிகளில் இறங்கிப் போராடுவார்கள்! – அரசுக்குச் சஜித் எச்சரிக்கை

ஒட்டுமொத்த மக்களும் வீதிகளில் இறங்கிப் போராடுவார்கள்! – அரசுக்குச் சஜித் எச்சரிக்கை

by selvan
June 10, 2026
0

"அரசின் இந்த ஒடுக்குமுறைச் சூழலைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ஒட்டுமொத்த மக்களும் வீதிகளில் இறங்கிப் போராடும் நாள் வெகுதொலைவில் இல்லை" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரித்துள்ளார்....

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முற்றாக நீக்கப்படும்!

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முற்றாக நீக்கப்படும்!

by selvan
June 9, 2026
0

"அடக்குமுறைச் சட்டங்களை நடைமுறைப்படுத்தி நாட்டை ஆள வேண்டிய அவசியம் தற்போதைய அரசுக்குக் கிடையாது. எமது பின்னால் பலமிக்க மக்கள் ஆணை காணப்படுகின்றது. எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டம்...

சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலை சதுரங்கத்தில் மீண்டும் சாதனை

சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலை சதுரங்கத்தில் மீண்டும் சாதனை

by selvan
June 9, 2026
0

இலங்கை பாடசாலை சதுரங்க சங்கத்தின் ஏற்பாட்டில், கல்முனை வலய பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டி 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் இடம்பெற்றது....

அரச தரப்புப் பாடினால் சட்டவிலக்கா?தமிழ் இளைஞர் பாடினால் கைதா? – நாமல் கேள்வி

அரச தரப்புப் பாடினால் சட்டவிலக்கா?தமிழ் இளைஞர் பாடினால் கைதா? – நாமல் கேள்வி

by selvan
June 9, 2026
0

"உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சாரங்களின் போது, தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கருப்பொருள் கொண்ட பாடல்களைத் தங்களின் அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திய போதும்,...

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் 

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் 

by selvan
June 9, 2026
0

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைய க்ளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய நேற்று (08) திங்கட்கிழமை பாடசாலையில் இடம்பெற்றது....

பொருளாதாரத்தைப் படுகொலை செய்தவர்களே இன்று பொருளாதாரம் பற்றிப் பேசுகின்றார்கள்!

பொருளாதாரத்தைப் படுகொலை செய்தவர்களே இன்று பொருளாதாரம் பற்றிப் பேசுகின்றார்கள்!

by selvan
June 9, 2026
0

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷக்கள் ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தையும் படுகொலை செய்தவர்கள் என்று நாட்டின் உயர்நீதிமன்றமே ஏகமனதாகத் தீர்ப்பளித்துள்ளது. அவ்வாறு நாட்டை வங்குரோத்து நிலைக்குத்...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!

by selvan
June 9, 2026
0

"உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் உள்ளிட்ட முக்கிய வழக்குகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் மிக விசேட விசாரணைகளை எக்காரணம் கொண்டும் தடுத்து நிறுத்த...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி