உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பொலிஸ் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
65 பார்வைகள்

இலங்கை பொலிஸ் துறையில் பயிற்சிப் பொலிஸ் கான்ஸ்டபிள், பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதிகள் ஆகிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் இறுதித் திகதி வரும் ஜூன் மாதம் 1ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள விவரங்கள் வருமாறு:-

விண்ணப்ப நீடிப்பு விவரம்
கடந்த 2026 மார்ச் 27ஆம் திகதியிட்ட 2482ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்கவே இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி கடந்த 2026 மே 8ஆம் திகதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், 2026 மே 15ஆம் திகதியிட்ட 2489ஆம் இலக்க புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், விண்ணப்பங்களை ஏற்பதற்கான இறுதித் திகதி தற்போது 2026 ஜூன் 1ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இணையவழி விண்ணப்பங்கள்
இந்தப் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் முழுமையாக இணையவழி முறைமையினூடாக மட்டுமே விண்ணப்பிக்கப்பட வேண்டும் என்று பொலிஸ் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.

இணையவழியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதில் ஏதேனும் தொழில்நுட்ப அல்லது நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ளும் விண்ணப்பதாரர்கள், பொலிஸ் ஆட்சேர்ப்புப் பிரிவை நேரடியாகத் தொடர்புகொண்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:-

  • 071-8591925
  • 011-2505202
  • 011-2552953
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

161 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

150 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

141 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

138 0 0