உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

யு.என்.டி.பி. திட்டங்களை மதிப்பீடு செய்வது எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
107 பார்வைகள்

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தால் (யு.என்.டி.பி.) எமது மாகாணத்தில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் உண்மையான தாக்கங்களையும் அதன் அடைவுகளையும் துல்லியமாக மதிப்பீடு செய்வது, எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை இன்னும் வினைத்திறனான முறையில் திட்டமிட்டு வடிவமைக்கப் பெருமளவில் உதவும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் சுயாதீன மதிப்பீட்டகத்தின் பிராந்திய மதிப்பீட்டு ஆலோசகர் டேவிட் சிலட்டரி மற்றும் மதிப்பீட்டு ஆய்வாளர் கெட்டலினா சலசார் ஆகியோருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று வியாழக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

யு.என்.டி.பி. நிறுவனம் வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் முன்னெடுத்த பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான விரிவான மதிப்பீடுகளை மேற்கொள்வதும், அவற்றின் தற்போதைய நிலைப்பாடுகள் மற்றும் அடைவுகளை ஆராய்வதுமே இச்சந்திப்பின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது.

இதன்போது, கடந்த காலத் திட்டங்களின் படிப்பினைகளைக் கொண்டு எதிர்காலத்தில் மாகாணத்தின் தேவைப்பாடுகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் ஆளுநரின் இணைப்புச் செயலாளரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

161 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

150 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

141 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

138 0 0