உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வட்டிக்குப் பணம் வழங்கும் வர்த்தகர் சுட்டுக் கொ*லை; இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
21 பார்வைகள்

காலி, தங்கேதர பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர், காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 12ஆம் திகதி காலை தங்கேதர, டிக்சன் சந்தி பகுதியில் காரில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 44 வயதுடைய நபர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த விபரீத சம்பவத்தில் உயிரிழந்தவர் வட்டிக்குப் பணம் வழங்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என்று பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன், நீண்டகாலமாக நிலவி வந்த பணக் கொடுக்கல் – வாங்கல் தகராறு காரணமாகவே இந்தக் கொலைச் சம்பவம் அரங்கேறியிருக்கலாம் என்று பொலிஸார் பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்தக் கோர கொலைச் சம்பவம் தொடர்பில் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையிலேயே, கொலையுடன் நேரடியாகத் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் நேற்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

69 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0