உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 85,905 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
76 பார்வைகள்

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் முப்பத்தெட்டு இலட்சத்து தொன்னூற்றேழாயிரத்து எழுநூற்று ஜம்பத்தெட்டு சதுரமீற்றர் பரப்பளவில் (3,897,758) இருந்து எண்பத்தையாயிரத்து தொளாயிரத்தைந்து (85,905) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.

இன்று அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது வட பகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஈடுபடும் ஸார்ப் நிறுவனமானது கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2026 மே மாதம் இன்று வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் தச்சடம்பன், அம்பகாமம், ஒலுமடு மற்றும் மாங்குளம், கொக்காவில் பகுதியிலும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள பகுதியிலும்; கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள முகமாலை, கிளாலி, இயக்கச்சி மற்றும் ஆனையிறவிலும் கண்டாவளை பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள தட்டுவன்கொட்டி பகுதியிலும், யாழ் மாவட்டத்தில் சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள கெற்பேலி பகுதியிலும் இருந்து முப்பத்தெட்டு இலட்சத்து தொன்னூற்றேழாயிரத்து எழுநூற்று ஜம்பத்தெட்டு சதுரமீற்றர் பரப்பளவில் (3,897,758) இருந்து எண்பத்தையாயிரத்து தொளாயிரத்தைந்து (85,905) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.

இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனத்திற்கு இலங்கைக்கான ஜப்பானிய தூதரக பிரதிநிதி குறுக்கோவா எறிக்கோ மற்றும் ஜனனி கந்தையா ஆகியோர் கடந்த 16.05.2026 அன்று வருகை தந்தனர்.

இதன் போது அவர் ஸார்ப் நிறுவன அலுவலகம் மற்றும் மாங்குளம் கண்ணிவெடியகற்றி கையளிக்கப்பட்ட பிரதேசங்களின் தற்போதைய முன்னேற்ற நிலை பிரதேச தளம் என்பவற்றை மேற்பார்வையிட்டார். இதன் போது கண்ணிவெடியகற்றப்பட்டு கையளிக்கப்பட்ட பிரதேசங்கள் தற்போது வேலை நடைபெறும் பிரதேசங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

83 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

88 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

69 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனைக் காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டவர் சிவராசா அனோஜனுக்கு உதவ இலங்கை அரசாங்கம் தனது சட்டரீதியான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது அங்குள்ள சட்டக் குழுவினர்…

75 0 0