உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
27 பார்வைகள்

கொழும்பில் இன்று 19 ஆம் திகதி பிற்பகல் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில், கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவ நினைவிடத்திற்கு முன்பாக இன்று நடைபெறும் தேசிய வெற்றி விழா நினைவு நிகழ்வினை முன்னிட்டு இந்த விசேட போக்குவரத்து செயல் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய, இன்று மாலை 3.30 மணி முதல் கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்கள் பொல்துவ சந்தியிலும், கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் கியஹேம் சந்தியிலும் கட்டுப்படுத்தப்பட்டு, பின்வரும் மாற்று வழிகளில் திருப்பி விடப்படும்.

மாற்று வழிகள்:- நாடாளுமன்ற வீதியூடாக கொழும்பிலிருந்து வெளியேற வரும் வாகனங்கள் பொல்துவ சந்தியிலிருந்து பத்தரமுல்லை, பாலன்துன, கியன்னேம் சந்தி ஊடாக பயணிக்க முடியும்.

கியன்னேம் சந்தியிலிருந்து கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் பாலன்துன, பத்தரமுல்லை ஊடாக பயணிக்க முடியும். ரஜமல்வத்த பகுதியிலிருந்து போதிராஜ மாவத்தை ஊடாக வரும் வாகனங்கள் பத்தரமுல்லை வீதியை வந்தடைந்து, தேவையான வீதி வழியே பயணிக்க முடியும்.

பேருந்துகள் மற்றும் லொறிகளை நிறுத்துவதற்கான இடங்கள்:- ஜப்பான் நட்பு வீதி சந்தியிலிருந்து கிம்புலாவல சந்தி வரை. ஜப்பான் நட்பு வீதி மின்சார சபைக்கு அருகிலிருந்து பெலவத்த வரை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

34 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

70 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

67 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

66 0 0