மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். கடன் சுமை குறையும். இறைவழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானத்தோடு செயல்பட வேண்டும். மனதிற்கு பிடித்த நபரோடு சண்டை போட வேண்டாம். எந்த விஷயத்திலும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். இன்று பொறுமையாக இருந்தால் நிறைய நல்ல விஷயங்களை சாதிக்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று உற்சாகமாக இருப்பீர்கள். சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக செய்ய முடியாமல் கிடப்பில் போட்டு வைத்திருந்த வேலைகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டை சுத்தம் செய்வது, பழுது போன பொருட்களை சரி பார்ப்பது போன்ற வேலையில் கவனம் காட்டுவீர்கள். மனநிறைவு ஏற்படும் நாள் இன்று.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வேலைகள் சுறுசுறுப்பாக நடக்கும். நேரத்தை அனாவசியமாக வீணடிக்க மாட்டீர்கள். உங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். இந்த நாள் சந்தோஷத்திற்கு எந்த குறையும் வராது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலைக்கு முயற்சி செய்யலாம். புதிதாக வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கலாம். எதிர்கால சேமிப்புக்கு முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்லதே நடக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கூடுமானவரை வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் முன்கோபம் வரும். தேவையில்லாத சண்டை சச்சரவுகள் வரும். வேலையிலும் சரி, வியாபாரத்திலும் சரி பகையை வளர்க்க வேண்டாம். நட்புறவுடன் பழக வேண்டும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உங்களுக்கு இன்று அவசியம் தேவைப்படுகிறது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நன்மைகள் நடக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். உங்களுடைய தேவைகளை சரியான நேரத்தில் பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்க காத்துக்கொண்டிருக்கிறது. உயர்வு நிறைந்த நாளாக இந்த நாள் இருக்கும். மதிப்பும் மரியாதையும் உங்களை தேடி வரும். எந்த இடத்தில் அவமானம் கிடைத்ததோ, அதே இடத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்ப சந்தோஷம் இரட்டிப்பாகும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரும். உங்களுக்கான மரியாதை உங்கள் வீடு தேடி வரும். கௌரவம் கூடும். மனது முழுவதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். இறை வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். பொதுப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். தலைகனம் உயரவே கூடாது, அதில் மட்டும் கவனம் இருக்கட்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுகபோக வாழ்வுதான். சென்ற இடமெல்லாம் சீரும், சிறப்பும், மரியாதையும் உங்களை தேடி வரும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஓய்வு என்று இந்த நாள் ராஜ உபச்சாரத்தோடு நடக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். சுபகாரிய பேச்சுக்களை இன்று தொடங்கலாம். நல்லதே நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை தேவை. நிதானத்தோடு நீங்கள் செய்யும் வேலைகள் வெற்றியைத் தரும். ஆர்ப்பாட்டத்தோடு, கோபத்தோடு நீங்கள் கையில் எடுக்கும் வேலைகள் நிச்சயம் தோல்வியை கொடுக்கும். சண்டை வேண்டாம், விவாதம் வேண்டாம், மௌனமாக இருந்து உங்களுடைய காரியத்தை இன்று சாதித்துக் கொள்ளுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக நடந்து கொள்வீர்கள். எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அதை நிதானமாக கடந்து செல்வீர்கள். இறைவனின் பரிபூரண அருள் உங்களுக்கு இன்று கிடைக்கும். நல்ல பக்குவம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு ஒரு உதாரணமாக, நீங்கள் இன்று வாழ்ந்து காட்டுவீர்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.


