உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 17.05.2026

ராசி பலன்கள் 5 மாதங்கள் முன்
50 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீட்டில் நீண்ட நாட்களாக செய்யாமல் போட்டு வைத்திருந்த வேலைகளை இன்று கையில் எடுங்கள். காரிய தடை விலகும். விடுமுறை நாள் என்பதால் இன்று வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இரட்டிப்பு வேலை இருக்கும். கொஞ்சம் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சந்தோஷம் இரட்டிப்பாகும். மனதிற்கு பிடித்த நபருடன் நீண்ட நேரம் பேசி, நேரத்தை செலவு செய்வீர்கள். சந்தோஷமாக நேரம் கடந்து போகும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். இந்த விடுமுறை நாள் உங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக அமைய நிறையவே வாய்ப்பு உள்ளது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக சிந்தித்து செயல்படுவீர்கள். பிரச்சினைகள் வந்தால் கூட, பிரச்சினையில் இருந்து எப்படி கடந்து செல்வது என்று தந்திரமாக சிந்தித்து செயல்படுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும் நாள் இன்று. புது மனிதர்களை நம்பாமல் இருப்பது நல்லது.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று தெளிவாக சிந்தித்து செயல்படுவீர்கள். உங்களுடைய கடமையிலிருந்து தவற மாட்டீர்கள். இன்னும் சொல்லப்போனால் வரக்கூடிய நாளில் உங்களுக்கு என்னென்ன தேவை என்னென்ன தேவை இல்லை என்பதை இன்றே முடிவு செய்து விடுவீர்கள். எதிர்காலத்திற்கு தேவையான நல்ல முடிவுகள் இன்று உங்களுக்கு கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் பெரிதாக சிரமங்கள் எதுவும் வராது. குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் என்று இந்த நாள் ஒரு வரமான நாளாக அமையும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடை விலகும். இன்று விடுமுறை நாள் என்பதால் வீட்டில் சந்தோஷம் இரட்டிப்பாகும். குடும்பத்தோடு நீண்ட நேரம், நேரத்தை செலவு செய்வீர்கள். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்வீர்கள். சுப செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று எதிர்ப்புகளை சமாளிக்கும் பக்குவம் தேவை. எதிரிகளுடன் சண்டை போடும் தைரியம் தேவை. மனதை தளர விடக்கூடாது. எந்த விஷயத்திற்காகவும் பயப்படக்கூடாது. துணிச்சல் உங்களுக்கு தேவைப்படுகிறது. எப்படியாவது மன பயத்தை போக்கி, துணிச்சலை வர வைத்துக் கொண்டு இன்றைய நாளை கடந்து விடுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். அடமானத்தில் வைத்த நகைகள், சொத்துக்களை மீட்பதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்லது நடக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன நிம்மதி இருக்கும். நீண்ட நாள் பகை விலகும். தேவையில்லாத டென்ஷன் குறையும். நீண்ட நாள் சந்தேகங்களுக்கு உண்டான விடையும் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பிரிந்த கணவன் மனைவிக்குள் மீண்டும் நல்ல உறவு உண்டாகும். வீட்டில் இருந்து வந்த சுபகாரிய தடை விலகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஆக்கப்பூர்வமாக நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். இன்று விடுமுறை நாள் என்று நினைக்கவே மாட்டீர்கள். உங்களுடைய கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். முக்கியமான வேலைகளை இன்று செய்து முடிப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டை சுத்தம் செய்வது பழுது போன பொருட்களை சரி செய்வது இது போன்ற பணிகளில் ஈடுபட்டு மனநிறைவை அடைவீர்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் நிறைய குழப்பம் இருக்கும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் இருக்கும். தேவையில்லாத டென்ஷன் உங்களை துரத்தி வரும். இறை வழிபாடு செய்யுங்கள். நிதானத்தோடு செயல்படுங்கள். முன்கோபம் வேண்டாம். அதிகம் பேச வேண்டாம். இன்று எந்த புது முடிவுகளும் எடுக்க வேண்டாம். இந்த நாளை அப்படியே விட்டு விடுங்கள். அது போக்கில் போகட்டும். இறைவனை மட்டும் நம்புங்கள். நல்லதே நடக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், கணவன் மனைவி ஒற்றுமை என்று குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வேலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உங்களை விட்டு விலகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளின் போது கவனம் தேவை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

64 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

59 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

99 0 0