உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மட்டு. சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
70 பார்வைகள்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்று வந்த சிறைக்கைதி ஒருவர், இன்று வியாழக்கிழமை சிறை அதிகாரிகளின் காவலில் இருந்து தப்பியோடியுள்ளார்.

தேவபுரம், காளிகோவில் வீதி, மொறக்கட்டாஞ்சேனையைச் சேர்ந்த பத்மராஜா டினேஸ் (வயது 36) என்ற கைதியே தப்பியோடியுள்ளார்.

நபர் ஒருவருடன் சண்டையிட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இவருக்கு, நீதிமன்றம் 3 மாத கால சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.

சம்பவ தினமான இன்று காலை, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இவரைக் கட்டுமானப் பணிகளுக்காகச் சிறைச்சாலைக்கு வெளியிலுள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மேசன் வேலை (கட்டுமானப் பணி) செய்து கொண்டிருந்த நிலையில், உத்தியோகத்தர்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

தப்பியோடித் தலைமறைவாகியுள்ள பத்மராஜா டினேஸைக் கைது செய்வதற்காகச் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்துச் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

159 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

147 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

138 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

137 0 0