உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

முன்னாள் அமைச்சருக்கு எதிரான நிதி மோசடி வழக்கு ஒத்திவைப்பு!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
32 பார்வைகள்

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 61 இலட்சம் ரூபாவுக்கும் அதிக நிதியை மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 19ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாகக் கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது.

சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்தக் குற்றப்பத்திரிகையில், 2014 – 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த நிதி மோசடி இடம்பெற்றுள்ளது என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வெள்ள நிவாரணம் வழங்குவதாகக் கூறி, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 61 இலட்சத்து 46 ஆயிரத்து 110 ரூபா நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, அவரது மனைவி உள்ளிட்ட 7 பேர் இவ்வழக்கில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று இவ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, எதிர்வரும் ஜூன் மாதம் 19ஆம் திகதிக்கு விசாரணைகளை ஒத்திவைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

65 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

36 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0