• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 15, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர்.!

Mathavi by Mathavi
May 13, 2026
in இலங்கை செய்திகள்.
0
பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர்.!
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுவருவதாக கிழக்கு பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் நே.விமல்ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
எனக்கு 2023 ஆம் ஆண்டு முதன்முதலாக கிழக்கு பல்கலைக்கழகத்திலே பேரவை உறுப்பினர் பதவி கிடைக்கப்பெற்றது. பேரவை உறுப்பினர் என்பது கிழக்கு பல்கலைக்கழகத்திலே அபிவிருத்தி, நியமனங்கள், குற்றச்சாட்டுகளுக்குத் தீர்வு வழங்குதல், அபிவிருத்தி நடவடிக்கைகளை எவ்வாறு முன்கொண்டு செல்லுதல், ஒட்டுமொத்தமாக அந்த பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளையும் கவனிக்கின்ற, நடைமுறைப்படுத்துகின்ற, அனுமதியளிக்கின்ற ஒரு உயரிய சபை.

இந்த சபையின் பிரதான நோக்கம் இலங்கையிலே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்ற சட்டங்கள், நடைமுறையிலுள்ள சட்டங்கள், சுற்றறிக்கைகள், விதிகள் இவை அனைத்தும் சரியாக நடக்கின்றதா என்பதை குறிப்பாக அவதானிப்பதுதான் இந்தப் பல்கலைக்கழகப் பேரவையின் நோக்கம். கலந்துரையாடல் மூலமே இவை அனைத்திற்கும் தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். அந்த அடிப்படையிலே உள்வாரியாகவும் வெளிவாரியாகவும் பேரவை உறுப்பினர்களை நியமிப்பார்கள். உள்வாரியாக நியமிக்கப்படுபவர்களை விட ஒன்று அதிகமாக நியமிப்பார்கள் வெளிவாரியாக ஏனெனில் வெளிவாரியானவர்கள் சரியான முடிவுகளைப் பல துறைப்பட்ட துறையிலேயும் இருப்பவர்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக.

அந்த அடிப்படையிலே 2023 ஆம் ஆண்டு எனக்கு கிடைத்தபோது அன்றைய அரசாங்க அமைச்சர் மிகக் கடின பிரயத்தனங்களை மேற்கொண்டு இந்தப் பதவியை வரிதாக்குவதற்காக அன்றைய பிரதமர், அன்றைய ஜனாதிபதியிடம் மிகவும் பாரதூரமான நடவடிக்கைகள் எடுத்திருந்தார். இருந்தாலும் நான் என்னுடைய தொடர்ச்சியான முயற்சியின் காரணமாக தொடர்ந்து இந்தப் பல்கலைக்கழகத்திலே பணியாற்றுவதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொண்டேன், அவருடைய செயல்பாடு முறியடிக்கப்பட்டது.

இவ்வாறிருக்கையில் 2025 ஆம் ஆண்டு மீண்டும் இந்தப் பேரவையிலிருந்து இலங்கையில் அநேகமான பேரை இந்தப் பல்கலைக்கழகப் பேரவைகளிலிருந்து நிறுத்தினார்கள். அப்போது நான் ஒருவன் இலங்கையில் நியமிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகத்தின் ஒரேயொரு பேரவை உறுப்பினராக இது போன்ற நடைமுறைப் பிழை எனவும் இது செய்ய முடியாது என்றும் தட்டிக்கேட்டேன். தட்டிக்கேட்டபோது பல்கலைக்கழக மானியங்கள் பேரவையின் தலைவரோ செயலாளரோ ஒரு பொறுப்பான பதிலை குறிப்பிடவில்லை, அவருடைய பதிலும் நீதிக்கு முரணாகவும் சட்டத்திற்கு எதிராகவும் ஒரு தன்னிச்சையான செயல்பாடாக இருந்ததைக் கண்டித்து நான் உடனடியாக நீதிமன்றத்தை நாடினேன், நான் நினைக்கின்றேன் ஐந்து மாத காலத்தில் உயர் நீதிமன்றம் எனக்கு மீண்டும் இந்தப் பதவியை நான் வகிப்பதற்கான சகல தகுதிகளையும் கொண்டிருக்கிறேன் என்றும் என்னை நீக்கியது இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டவிதிகளின்படி பிழை என்றும் உடனடியாக என்னை மீண்டும் நியமிக்குமாறு கட்டளையிட்டது.

அதன் அடிப்படையிலே நான் மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு பணியாற்றுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தைப் பெற்றேன். இவ்வாறு பெற்று என்னுடைய காலப்பகுதியிலே இந்தப் பல்கலைக்கழகத்திலே காணி தொடர்பான குறிப்பாக நான் காணி தொடர்பான வேலையில் இருக்கிற காரணத்தினால் அது தொடர்பான அறிவு இருக்கிற காரணத்தினாலும் பல்கலைக்கழகத்திலுள்ள காணிப் பிரச்சினை குறிப்பாக மருத்துவ பீடத்திற்கு இருந்த பிரச்சினை சரி, கங்குவேலியிலே சித்த மெடிசினுக்கு ஒரு காணியைப் பெற்றுக்கொள்வதற்கு என்று பல தரப்பட்ட முயற்சியைச் செய்ததுடன் குறிப்பாக பல்கலைக்கழக அபிவிருத்தித் துறை சார்ந்த நடவடிக்கையில் மிகவும் ஊன்றுகோலாக நான் இருந்து அவர்களுக்குச் செயல்பட்டு அவர்களுடைய வரவேற்பைப் பெற்றவன் என்பதையும் குறிப்பிடுகிறேன்.

இது இவ்வாறிருக்கையில் இலங்கையிலே 2025 ஆம் ஆண்டு ஏழாம் இடத்தில் இருந்த பல்கலைக்கழகம் இன்று ஐந்து நிலை பின்னோக்கி 12 ஆவது இடத்திலே வந்திருக்கிறது. ஒரு மிகப்பெரிய மனவேதனையான விடயம். அதேபோன்று 1913 என்ற இடத்திலே இருந்தது 2025 ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியிலே ரேங்கிங்கில் இப்போது நாங்கள் 3500 இற்கும் மேற்பட்ட இடங்களைக் கடந்து 5000 இற்கும் மேற்பட்ட இடங்களைத் தாண்டியிருக்கிறோம். ஆனால் காலம் செல்லும்போது நேரங்கள் செல்லும்போது நல்லாட்சி என்கின்ற ஒன்று ஏற்படுத்தப்படப் போகும்போது நாங்கள் இன்னும் முன்னோக்கிச் செல்லாமல் பின்னோக்கிச் செல்கிறோம் என்பது பிரதான கவலையாக இருக்கின்றது.

குறிப்பாக நான் ஏற்கனவே ஊடகச் சந்திப்பொன்றைச் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தாலும் ஒரு பல்கலைக்கழக அதாவது பல்கலைக்கழகப் பேரவையின் கூட்டுப் பொறுப்பிலிருந்து விலகிவிடக்கூடாது என்பதற்காக அதற்குள்ளேயே இருந்து என்னால் தொடர்ச்சியாகக் குரல் கொடுக்கச் சந்தர்ப்பம் கிடைத்த அடிப்படையில் கொடுத்தேன். ஆனால் அது எடுபடுகிற மாதிரி இருக்கவே இல்லை. ஏனெனில் இங்கே எமது பல்கலைக்கழகப் பேரவையில் இருக்கின்ற உறுப்பினர்களைப் பார்ப்போமேயானால் கிழக்கு மாகாணத்தின் தலைமைச் செயலாளர், ஓய்வு பெற்ற அரசாங்க அதிபர், தற்போதைய அரசாங்க அதிபர், ஓய்வு பெற்ற உபவேந்தர்கள், விரிவுரையாளர்கள் என்று பல தரப்பட்ட கல்வியாளர்களைக் கொண்டிருக்கின்ற சபையானது அநியாயங்கள், நீதிக்கு முரணான செயல்பாடுகள் நடைபெறும்போது எந்தவொரு விடயங்களுக்காகவும் தட்டிக்கேட்பதிலிருந்து பின்வாங்குகின்றார்கள்.

இது எமது பல்கலைக்கழகத்திலே காணப்படுகின்ற உயர் பதவிகளை வகிக்கின்ற குறிப்பாகத் திறமையின் அடிப்படையில் இருக்கின்ற பல பேராசிரியர்கள், பல கல்வி சாரா ஊழியர்களுக்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு பேரவைக் கூட்டம் நடத்தப்படுவதாக இருந்தால் அது வழக்கமான நடைமுறையில் ஒன்பது ஒன்பதரரை மணிக்குத் தொடங்கினால் 12 ஒரு மணிக்கு முடிந்துவிடும். ஆனால் தற்போது எந்தவிதமான இடைவேளையும் இல்லாமல் தொடர்ச்சியாக நாலரை மணி வரைக்கும் நடத்தப்படுகிறது. ஒன்பது மணியிலிருந்து ஒரு மனிதனால் கிரகித்துக் கொள்ளக்கூடிய அல்லது சகித்துக் கொள்ளக்கூடிய தொடர்ச்சியான நேர அளவு வழங்கப்படுவதில்லை. இது திட்டமிட்டே நடைபெறுகின்றது.

நான் பல தடவைகள் குறிப்பிட்டேன் இவ்வாறு நடத்த வேண்டாம் ஒரு இடைவேளையுடன் நடத்துங்கள் என்று சொல்லியும் நடத்தாமல் நடத்தப்படுவதற்கு பிரதான காரணம் கொஞ்சப் பேர் இந்த இடைவேளை விட்ட இடையில் போய்விடுவார்கள் சிலர் களைத்துவிடுவார்கள். அந்தச் சந்தர்ப்பத்திலே பல தவறான முடிவுகள், பல முன்னுதாரணங்களை நான் இந்த இடத்திலே குறிப்பிடலாம். உண்மையாக அவ்வாறு செய்ய முடியாது. ஆனால் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி கருதி நாங்கள் 24 மணித்தியாலமும் விவாதிக்கத் தயாராக இருக்கிறோம். பல்கலைக்கழகத்தின் நன்மை கருதி. ஆனால் அங்கே கதைக்கப்படுகிற விடயங்கள் எல்லாம் என்ன? யாரைக் குத்தலாம்? யாரை வெட்டலாம்? என்று ஒரு குறிப்பிட்ட குழு அங்கே ஆட்சி செலுத்துகிறது. அங்கே தங்குடைய நண்பர் வட்டாரங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் அந்தப் பிரச்சினையை மூடி மறைக்கிற அளவுக்கு அங்கே அழுத்தம் பாவிக்கப்படுகிறது. அவர்களால் ஏனையோர் மௌனம் காப்பது குறிப்பாக இந்த உயர் அரசாங்கப் பதவிகளில் இருப்பவர்கள் தங்களுடைய மௌனத்தைச் சாதித்துக் கொண்டிருப்பது என்பது உண்மையிலே ஒரு பெரிய இந்த கவுன்சிலுக்குக் கிடைத்திருக்கின்ற ஒரு துரதிர்ஷ்டமான விதமாக நான் பார்க்கிறேன்.

குறிப்பாக அண்மைக் காலத்திலே ஏற்பட்ட ஒரு நிகழ்வைப் பற்றி நான் சொல்ல வேண்டும். எனக்குப் பல்கலைக்கழகம் சார்ந்தவர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் இந்தக் கல்வி சாரா நியமனங்களைப் பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தவர்கள் தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புகளையும் கடிதங்களையும் தந்து குறிப்பிட்டிருந்தார்கள் தாங்கள் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி சாரா ஊழியர் பதவிக்கு விண்ணப்பித்திருப்பதாகவும் அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் கூறினார்கள். அப்பொழுது நான் இந்த விடயம் தொடர்பாக என்ன நடந்திருக்கிறது என்று பார்த்துப் பதிவாளர், உபவேந்தருடன் கதைத்தேன், அதிலே உண்மையாகவே சில குறைபாடுகள் இருப்பதையும் நிர்வாகச் சீர்கேடுகள் இருப்பதையும் உணர்ந்து கடிதம் மூலம் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை நியமித்த ஜனாதிபதிக்கு அறிவித்தேன். அதன் நேரடி அமைச்சராக இருக்கின்ற பிரதமருக்கு அறிவித்தேன். இவர்களுக்கு பிரதி போட்டேன்.

பல்கலைக்கழக மானியங்கள் உறுப்பினர்களிடம் தயவாக நான் மன்றாடிக் கேட்டேன் இவ்வாறான நடைமுறைக்கு எதிராக உங்களுடைய குரலை நீங்கள் உயர்த்த வேண்டும் என்று ஏனெனில் பல்கலைக்கழகப் பேரவைதான் இவை அனைத்திற்கும் அனுமதி வழங்குகின்ற இடம்.

ஆனால் உபவேந்தர் என்ன செய்கிறார் என்றால் முன்கூட்டியே இதற்கெல்லாம் அனுமதி கிடைக்கும் என்கின்ற ஒரு நினைப்பை வைத்துக்கொண்டு, எனக்கு அது புதுமையாக இருக்கிறது அப்போ கவுன்சில் என்கிறது ஒரு மீட்டர் முத்திரை மாதிரி ஒரு பதவி முத்திரைக்காக இயங்குகின்ற ஒரு தளமாகப் பயன்படுத்தப்படுகின்றது என்கின்ற பாரிய சந்தேகம் எழுகின்றது. ஒரு உண்மையைச் சொல்வதற்கு நாங்கள் பின்னிக்க வேண்டிய தேவையில்லை. இது எங்களுடைய கல்வி, எங்களுடைய சமூகம் சார்ந்த பிரச்சினை இதை வெளியில் கொண்டு வரவேண்டிய கடப்பாடை ஒரு சகிக்க முடியாத ஒரு கட்டத்தின் எல்லைக்கு அப்பால் சென்றபடியால் தான் நான் இந்த ஊடக சந்திப்பை செய்கிறேன்.

என்ன செய்ய வேண்டும் கல்வி சாரா ஊழியர்களுடைய வெற்றிடம் காணப்பட்டால் உடனடியாக விண்ணப்பங்களை கோர வேண்டும். அது சரி, விண்ணப்பங்களை 2025 ஆம் ஆண்டு 11 ஆம் மாதம் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பு கோரி இருந்தார்கள். அப்போ கால் பண்ணி அதுக்கப்புறம் ஒரு பரீட்சை நடந்தது. பரீட்சை எப்படி நடத்தி இருக்க வேண்டும். பல்கலைக்கழக உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து வருவதால் இதிலே ஏற்கனவே பல பிரச்சினைகள் முரண்பாடுகள் இருக்கிறபடியால் இவர்கள் பல்கலைக்கழகம் சாராத இன்னுமொரு ஆளிடம் இந்தப் பரீட்சை வினாத்தாள்களை திருத்தும் பணிகளைக் கொடுத்திருக்க வேண்டும். அப்படி கொடுத்தார்களா என்றால் இல்லை.

சரி இவர்கள் திருத்தி வந்து மூன்றாம் மாதம் 17 ஆம் திகதி பரீட்சை நடந்திருக்கிறது. அதனுடைய பெறுபேறு இரண்டு மாதத்திற்குப் பிறகு இன்னும் வெளியிடவில்லை.

பெறுபேறு வெளியிடாமல் திடீரென்று கடந்த வெள்ளிக்கிழமை சிலருக்குக் கடிதம் கிடைத்திருக்கிற கடந்த வெள்ளிக்கிழமை தொலைபேசியில் அழைத்து நீங்கள் வாரீங்களா? உங்களுக்குக் கிடைத்திருக்கா? இவங்களுக்குக் கிடைத்திருக்கா? என்று கேட்கிறார்கள் இது ஒரு ஏற்புடைய நடைமுறை கிடையாது. உண்மையாக என்ன செய்ய வேண்டும் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை பார்ப்பதற்கு அவர்களுக்கான வசதி வாய்ப்புகளைப் பெற வேண்டும். அவங்களுடைய பெறுபேற்றை இவங்களுடைய இணைய பக்கத்தில் அல்லது விளம்பரப்பலகையில்போட்டு டிஸ்ப்ளே பண்ணி நீங்களெல்லாம் சித்தியடைந்து இருக்கிறீர்கள் நீங்களெல்லாம் இன்டர்வியூக்கு எலிஜிபிளானஆட்கள் நீங்கள் இல்லை என்று டிரான்ஸ்பரன்சியா செஞ்சிருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது.

இதிலிருந்து மேலும் மேலும் ஆராயும்போது பல விடயங்கள் பல நிர்வாகச் சீர்கேடுகளையும் முறைகேடுகளையும் என்னால் அவதானிக்க முடிந்தது. ஒன்று அவ்வாறு இருக்கும்போது அடுத்த கட்டமாக இந்த இன்டர்வியூக்கான பேனல் மெம்பர் நாலு பேரை உண்மையாக கவுன்சில் அப்ரூவலுக்கு இவர்கள் வருவார்களாக இருந்தால் கிட்டத்தட்ட நான் சொன்ன நேரம் மூன்று முதல் நாலு மணிக்குள் ஒரு நாலு பேரின் பேரைக் கொண்டு வந்து உபவேந்தர் இவர்கள் நாலு பேரையும் நான் பேனல் மெம்பராக நியமிப்பதற்கு அப்ரூவல் தாங்க என்று ஒரு அப்ரூவலைப் பெற்றிருக்கிறார். இது முற்றிலும் பிழையான நடைமுறை. ஒரு சேர்மனாக அவர் செஞ்சிருக்க வேண்டிய விடயம் இப்படி எனக்குத் தேவை நாலு பேர் நாமினேட் பண்ணுங்க என்று கேட்டிருக்கணும் ஒரு சுயாதீனமாக அல்லது அவர் ஒரு 10, 15 பேரோட அதற்கு எலிஜிபிளான ஆட்களோட பேரைக் கொண்டு வந்து கேட்டு இருக்கணும் இதில நாலு பேரைத் தெரிவு செய்யுங்க என்று அதுதான் ஒரு ஜனநாயகமும் ஏற்றுக்கொண்ட நடைமுறையும் ஒரு வெளிப்படைத்தன்மையான விடயம்.

உண்மையிலே இந்த விடயங்கள் எல்லாம் கல்வி சாரா ஊழியர்கள் சம்பந்தமான விடயங்கள் எல்லாம் பதிவாளரைச் சார்ந்தது. அது வந்து உபவேந்தரைச் சார்ந்தது கிடையாது ஆனால் நிர்வாகத்தின் சீப் எக்ஸிகியூட்டிவ் ஆபிசர் என்ற ரீதியில் அவர் இதில் தலையிடுவது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருந்திருக்க வேணும். அப்ப நான் தொடர்ச்சியாகச் சொன்னேன் அதற்கு எந்தவிதமான பதிலும் இல்லை. எழுத்து மூலமானது இல்லை.

இப்போ உதாரணமாக உபவேந்தருடைய அலுவலகத்திலே வேலை செய்கிற ஒரு நெருக்கமான ஊழியருடைய ரெண்டு பிள்ளைகள் சித்தியடைந்து இருக்கு. இன்டர்வியூ பேனல் மெம்பர்ல இருக்கிற ஒரு ஆளோட டிபார்ட்மெண்ட்ல இருக்கிற ஒரு ஆள் இன்டர்வியூ பேனல் மெம்பராக வாரவருடைய ஊழியருடைய மகள் சித்தியடைந்து இருக்கு. இப்ப அந்தப் பிள்ளைகள் உண்மையாவே திறமையாகக்கூடப் படித்துப் சித்தியடைந்து இருக்கலாம் இப்ப என்ன சந்தேகம் வலுக்கிறதென்றால் இவர் இதில இப்படி பிழையான நடைமுறைகளுக்குள்ளால போகப் போக இவர்கள் சித்தியடைந்தது சரிதானா என்கின்ற அளவுக்கு ஒரு சிலர் சொல்கிறார்கள். வினாத்தாள்களை விற்றுக் காசு வாங்கி இருக்கிறார்கள் என்ற மாதிரியான ஒரு விடயங்களும் முன்வைக்கப்படுகிறது.

இதெல்லாம் சரியான நடைமுறையைப் பின்பற்றி இருந்தால் நாங்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து இதை எதிர்த்திருக்கலாம் அப்படி எதுவும் நடைபெறவில்லை. உண்மையிலே ஒரு நாலு ஆட்கள் தேவையாக இருந்தால் அதை பொதுவான வெளியில் டிஸ்கஷனுக்கு விட்டு கலந்துரையாடலுக்கு விட்டுத் தெரிவிக்கப்பட்டு இருந்தால் இந்தப் பிரச்சினை இவ்வளவு தூரத்திற்கு எழுந்திருக்காது. இப்போது என்னிடம் தொடர்புகொண்டு கேட்டவர்களை நான் கூறினேன் நீங்கள் போய் பல்கலைக்கழகத்திலே இருக்கின்ற பதிவாளரை உங்களுக்குத் தெரியும் இப்போ கிட்டடியில ஒரு உயர் நீதிமன்றத்தோட வழக்கு வந்திருக்கு தீர்ப்பொன்று வழங்கப்பட்டிருக்கிறது. அதிலே நீதியரசர்கள் வந்து குருசிங்க, கௌரவ குருசிங்க சார் மற்றும் சுமுது பிரேமச்சந்திர ஆகியோரால் ஒரு தீர்ப்பொன்று வழங்கப்பட்டிருக்கிறது.

ஒரு பரீட்சார்த்தி வந்து தனது பரீட்சை முடிவுகளைத் தான் பார்க்கலாம். இப்படித் தகவல் அறியும் சட்டம் என்று எங்கேயோ போய்க்கொண்டிருக்கும்போது இப்படி ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத நடைமுறையில் செய்கிற இந்தத் தீர்மானங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது. இது பல்கலைக்கழகத்தின் பேருக்குக் கெட்ட பெயரைக் கொண்டு வரும் அதைத் இந்த நடைமுறைச் சிக்கல் இருக்கு. உங்களுக்கு நான் ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும் ஏன் நான் இந்த விடயத்தைக் குறிப்பிடுகிறேன் என்றால் 2023 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தினுடைய யுனிவர்சிட்டி சர்வீஸ் அப்பீல் போர்டு இதைப் பாருங்கள் இதிலிருக்கு.

இதில ஒரு முடிவொன்று சொல்லப்படுது என்னவென்றால் இவ்வாறான ஒரு நியமனமொன்று ஏற்கனவே செய்யப்பட்டிருக்கு. அந்தச் செய்யப்பட்ட நியமனத்தில் ஒரு குறிப்பிட்ட நபரை எடுக்கணும் என்பதற்காகப் பல விதிமுறைகளும் மீறப்பட்டிருக்கு. அவ்வளவு விதிமுறைகளையும் நீங்கள் நிவர்த்தி செய்து அந்த குறிப்பிட்ட கேண்டிடேட் கம்ப்ளைனருக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள் என்று சொல்லி வந்திருக்கு எப்போ வந்திருக்கு 2023 ஆம் ஆண்டு வந்திருக்கு. ஆனா இன்னைக்கு 2027 ஆம் ஆண்டு வரைக்கும் நாங்கள் எந்த நிவாரணமும் காணாமல் இருக்கிற பிழை இதுதான்.

அப்ப 2023 ஆம் ஆண்டு நான் மெம்பராக இருக்கும்போது எந்தவிதமான கட்டணமும் இன்றி நானாக முன்வந்து இதிலிருக்கிற பிழைகளை உண்மையாகவே என்ன இருக்கிறது என்று பார்க்கிற பேக்ட் பைண்டிங்க்கு போயிருந்த நேரம் உண்மையாக இதை உறுதிப்படுத்தக்கூடிய மாதிரி இருந்தது. இந்த நடைமுறை பிழையென்று. அதே நடைமுறை அதாவது இங்க சொல்லி இருக்கிறார்கள். நான் சொல்றேன் ஒரு ஆளுக்குச் சரியான முறையில் தகவல் பரிமாறணும் அவருக்குப் போதுமான அளவு டைம் கொடுக்கணும். குறைந்தபட்சம் 14 நாட்கள் வேலை நாட்கள் கொடுக்கணும் ஒரு நபர் குறிப்பாகச் சுகமில்லாமல் இருந்திருக்கலாம் அல்லது அவர் வெளிநாட்டிலே வேற ஏதாவது தனது வேலை நிமித்தமாகப் போயிருக்கிற நபர் உடனடியாக வரலாமா? வர இயலாது. வெளிப்படைத்தன்மை இல்லாமல் நடத்தப்பட்டிருக்கு இது பிழை என்று சொல்லப்பட்ட விடயத்திற்கு நாங்கள் தீர்வு காணாமல் அதே பிழையை நாங்கள் திருப்பியும் செய்றோம் என்றால் அப்ப எங்களோட இன்னும் எங்களோட பல்கலைக்கழகம் பின்னுக்குப் போறதோட நாங்கள் இன்னும் 10 வருஷத்துக்கு இதற்காகக் காலத்தைச் சுமக்க வேண்டியிருக்கு காலத்தை வீணடிக்க வேண்டியிருக்கு.

உண்மையாகப் பல்கலைக்கழகப் பேரவைக் கூட்டங்களில் நான் என்னுடைய சக பேரவை உறுப்பினர்களிடம் கேட்பேன் இவ்வாறான நிகழ்வுகள் வரும்போது இப்போ இது நீண்ட நேரம் ஒரு தேவையில்லாத சில விடயங்களை நாங்கள் பேசிக் கொண்டிருக்கோமே என்று கேட்டால் அவர்கள் சொல்லும் ரெண்டு விடயம். ஒன்று இதைக் கதைத்து என்ன பிரயோஜனம் என்று இன்னொன்று நம்ம நம்மளோட பாடில் வந்தோம் இருந்தோம் போவோம் என்று ஆனா நமக்கு இதைச் சுமக்க இயலாது.

ஏனென்றால் நாம வந்து ஏற்கனவே பல துறைகளில் பரீட்சயமாக இந்த நடைமுறைகளால் பாதிக்கப்பட்டவர் என்ற ரீதியில் இவ்வாறான விடயங்கள் ஒரு அரச ஊழியருக்கு நடப்பதற்கு இடம் வழங்கவே கூடாது. இப்ப என்ன நடக்குது என்றால் ஒரு நாலஞ்சு பேர் சேர்ந்து முடிவெடுக்கிற மாதிரியான ஒரு நிலவரம் அங்கு உருவாகி இருக்கிறது. இது ஒரு பாரதூரமான நிலவரம் நான் இந்த விடயத்தை இன்னைக்கு ஊடகத்திற்கு முன்னால் சொல்கிறேன் இதை நான் சவால் விட்டு சொல்கிறேன் நீங்கள் எந்த இடத்தில், எப்ப நடந்தாலும், எங்க கூப்பிட்டாலும், என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு முகங்கொடுக்கத் தயாராக இருக்கிறேன். ஏனென்றால் இதுக்கு மேல இதை வளர்க்க இயலாது பல திறமையான அதிகாரிகள் இதால் பாதிக்கப்படுகிறார்கள்.

Related Posts

மருதங்கேணியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.!

மருதங்கேணியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.!

by Mathavi
May 15, 2026
0

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு இளைஞர்களின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலாளருக்கு முன்னால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது. நினைவேந்தலில் பொது ஈகைச்சுடர்...

மன்னார் கட்டுக்கரை திட்ட மேலாண்மை குழுவின் கட்டமைப்பைக் கலைக்க தீர்மானம்.!

மன்னார் கட்டுக்கரை திட்ட மேலாண்மை குழுவின் கட்டமைப்பைக் கலைக்க தீர்மானம்.!

by Mathavi
May 15, 2026
0

மன்னார் மாவட்ட செயலகத்தில் கட்டுக்கரை குளத்தின் கீழ் சிறுபோக வேளாண்மை செய்கின்ற, ஈவு வழங்குகின்ற செயற்பாடுகளில் இருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மூலம் வழங்கப்பட்ட...

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!

by Mathavi
May 14, 2026
0

கிளிநொச்சி கோணாவில் பகுதியில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இன்று(14) பகல் நடைபெற்றது. யுத்தத்தின்போது கொல்லப்பட்ட மக்களுக்கான...

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட யாரும் தப்ப முடியாது.!

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட யாரும் தப்ப முடியாது.!

by Mathavi
May 14, 2026
0

இந்த நாட்டில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது. இன்று அனைத்து துறைகளும் சுயாதீனமாக செயற்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக விசாரணைகள் அனைத்தும் சுயாதீனமாக முறையில்...

வரவுபிலவுக் குளத்தை விடுவித்து சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து.!

வரவுபிலவுக் குளத்தை விடுவித்து சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து.!

by Mathavi
May 14, 2026
0

தனிநபர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையப் பிரிவிற்குட்பட்ட வரவுபிலவுக் குளத்தினை விடுவிப்புச் செய்வதுடன், குறித்த குளத்தினைச் சீரமைப்புச் செய்து விவசாயிகளிடம் கையளிக்குமாறு வன்னிமாவட்ட...

மன்னாரில் காணி தொடர்பான இலவச ஆலோசனை முகாம்.!

மன்னாரில் காணி தொடர்பான இலவச ஆலோசனை முகாம்.!

by Mathavi
May 14, 2026
0

மன்னாரில் காணி தொடர்பான இலவச ஆலோசனை முகாம் நேற்று புதன்கிழமை (13) மற்றும் இன்று வியாழக்கிழமை (14) ஆகிய இரு தினங்களும் மாலை வேளையில் மன்னாரில் உள்ள...

கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!

கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!

by Mathavi
May 14, 2026
0

தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கு நீதி நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை சர்வதேச சமூகத்திடமும் இந்த அரசிடமும் கேட்டுக்கொள்கின்றேன் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட...

மட்டக்களப்பில் வெள்ளத்தில் மூழ்கிய பல பகுதிகள்.!

மட்டக்களப்பில் வெள்ளத்தில் மூழ்கிய பல பகுதிகள்.!

by Mathavi
May 14, 2026
0

மட்டக்களப்பு மாவட்டத்தின் இன்று மாலை தொடக்கம் இடியுடன் கூடிய கடும் மழை பெய்து வருகின்றது. மட்டக்களப்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு நகரின் பல்வேறு...

சஜித்தின் குழுவினரைத் தேடி அரசு மீன்பிடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.!

சஜித்தின் குழுவினரைத் தேடி அரசு மீன்பிடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.!

by Mathavi
May 14, 2026
0

தேசிய மக்கள் சக்தியின் 159 மலர்களும் வாடிவிட்டன. நாட்டை ஆளத் தகுதியானவர்கள் இல்லாததால், சஜித் பிரேமதாஸவின் குழுவினரைத் தேடி அரசு மீன்பிடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது என்று ஐக்கிய...

மழையின் வீரியம் குறையும்.!

மழையின் வீரியம் குறையும்.!

by Mathavi
May 14, 2026
0

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் மழையுடனான காலநிலை நாளை வெள்ளிக்கிழமை மாலை முதல் படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்று வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி