உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

புதுக்குடியிருப்பில் நுண்கலை வகுப்புகள் ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
37 பார்வைகள்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையினால் மக்களின் நலனை முன்னிறுத்தி பல்வேறு சமூக நல வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், கலைகள் அருகி வரும் இக்கால கட்டத்தில் பண்பாட்டு பெருவிழாக்கள், விளையாட்டு ஆர்வம் குறைந்து வரும் நிலையில் விளையாட்டு போட்டிகள், அண்மையில் சித்த ஆயுள்வேத மருத்துவ முகாம் போன்ற பல்வேறு சமூக சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது நுண்கலை வகுப்புகளும் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் யுவதிகள் தவறான பாதைகளில் செல்லாது, தங்களின் திறமைகளை வளர்த்துக் கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற நோக்கில் இந்நுண்கலை முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

யாழ். பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கம் – ஐக்கிய இராச்சிய கிளை (UOJAAUK) மற்றும் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை இணைந்து இந்த நுண்கலை வகுப்புகளை நடத்துகின்றன.

ஐக்கிய இராச்சிய யாழ். பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கத்தின் நிதி அனுசரணையில் சங்கீதம், நடனம், மிருதங்கம், தபேலா, கிற்றார், வயலின், கராத்தே மற்றும் ஓகன் போன்ற பாடப்பிரிவுகள் திறமையான ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை வளாகத்தில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

32 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

70 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

67 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

66 0 0