உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 12.05.2026

ராசி பலன்கள் 5 மாதங்கள் முன்
65 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். சோம்பேறித்தனத்தை விடுத்து உங்களுடைய கடமையில் கவனத்தோடு செயல்பட்டால், வெற்றி நிச்சயம் கிடைக்கும். இந்த நாளை தொடங்குவதற்கு முன்பு இறைவழிபாடு செய்யுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் பிரச்சினைகளை கண்டு சோர்ந்து போய் உட்காரவே கூடாது. கவனத்தோடு செயல்படுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் சோதனைகள் நிறைந்த நாளாக தான் இருக்கும். சில ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும். உங்கள் மனது நோகும்படி சில சம்பவங்கள் நடக்கலாம். பிரச்சினைகள் வரலாம். இருப்பினும் நம்பிக்கையை கைவிடாமல் இந்த நாளை நடத்திச் செல்லுங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தெளிவாக சிந்திப்பீர்கள். பிரச்சினைகளுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். உங்களுடைய பேச்சில் நிதானம் இருக்கும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை வெளிப்படும். பலவிதமான பக்குவங்களை, இன்றைய அனுபவம் உங்களுக்கு கொடுக்க போகிறது.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் மனக்கவலை இருக்கும். கவலைகளை ஓரம் வைத்துவிட்டு கடமையில் கவனத்தோடு செயல்படுங்கள். நிச்சயம் வெற்றி உங்களை வந்து சேரும். நேரத்தை வீணடிக்க கூடாது. ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். எல்லாம் நல்லதே நடக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் அதிகமாக இருக்கும். வாக்குவாதங்கள், பிரச்சினைகள் வரும். உறவுகளோடு சின்னச் சின்ன மன கசப்பான சம்பவங்கள் நடக்கலாம். நிதானத்தோடு செயல்படுங்கள். முன்கோபம் வேண்டாம். விட்டுக் கொடுத்து நடப்பதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நல்லது நடக்கும். இலாபம் அதிகரிக்கும். வராத பணம் உங்கள் கையை வந்து சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும். வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வேலையில் சுமுகமான போக்கு நிலவும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஆர்வம் நிறைந்த நாளாக இருக்கும். எல்லா புது விஷயங்களையும் சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். உங்களுடைய சுறுசுறுப்பு பல மடங்கு அதிகரிக்கும். நல்ல பெயர் கிடைக்கும். பெயர், புகழ், அந்தஸ்து உயரும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். நிதிநிலைமை மேலோங்கும்‌.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வருமானம் அதிகரிக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். மாணவர்களுக்கு, உயர் கல்விக்கு தேவையான பணம் சரியான நேரத்தில் கிடைக்கும். உயர் கல்வியை தொடர எந்த தடையும் வராது.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மனது கொஞ்சம் சோகமாக தான் இருக்கும். இறைவழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும். தேவையில்லாத விஷயங்களை போட்டு மனதில் குழப்பிக் கொள்ள வேண்டாம். மனதை குப்பை தொட்டி போல் வைத்துக் கொள்ளாதீர்கள். இறைவனின் பரிபூரண அருள் உங்களுக்கு இருக்கு. பிரச்சினைகளை தூக்கி போட்டுவிட்டு வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும். எதிரிகளோடு இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். செல்லும் இடமெல்லாம் சீரும் சிறப்பு, மரியாதையும் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேவையற்ற செலவுகளை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். கடன் வாங்கும் பழக்கத்தை குறைத்துக் கொண்டால் எதிர்காலத்திற்கு நல்லது.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். புது மனிதர்களின் அனுபவம், புது விஷயங்களை கற்றுக் கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுடைய கடமைகளில் இருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

64 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

59 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

99 0 0