உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சாய்ந்தமருது பகுதியில் தெரிவு செய்யப்பட்ட கிராமிய வீதிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
60 பார்வைகள்

கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட கிராமிய வீதிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஆசிக்  தலைமையில், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா  பங்கேற்புடனும் நடைபெற்றது.

இதன் போது தண்டேயல் வீதி,பலாஹ் பள்ளி வீதி,தோணா ஈஸ்ட் (East) வீதி,போக்கடி குறுக்கு வீதி பின்வரும் வீதிகளுக்கான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

மேலும், இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர்,கணக்காளர், பிரஜா சக்தி தவிசாளர்கள், உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

மக்களின் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள்இ பிரதேசத்தின் முன்னேற்றத்திற்கும் மக்கள் நலனுக்கும் பெரும் பங்களிப்பாக அமையும் என  மக்கள் நன்றி தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

158 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

147 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

138 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

137 0 0