உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஜனாதிபதியின் நிந்தவூர் வருகை தொடர்பில் நிந்தவூர் பிரதேச சபையில் விசேட சபைக் கூட்டம்!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
55 பார்வைகள்

ஜனாதிபதியின் நிந்தவூர் வருகையை முன்னிட்டு  நிந்தவூர் பிரதேச சபையில் விசேட சபைக் கூட்டம்  இன்று  நடைபெற்றது. இவ்விசேட சபைக் கூட்டமானது  05ஆவது சபையின் 02ஆவது விசேட கூட்டம் நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில்இ தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தலைமையில் நடைபெற்றது.

நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸநாயக்கவின்    நிந்தவூர் வருகையை முன்னிட்டு  அதற்கான ஏற்பாடுகள் மற்றும் தொடர்புடைய செயற்பாடுகள் குறித்து இவ்விசேட சபைக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக, 2026ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தின் கீழ் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் சிபாரிசில் நிந்தவூர் கலாச்சார மண்டபத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை தொடர்பில் சபை உறுப்பினர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

மேலும், குறித்த கலாச்சார மண்டப கட்டிடத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்க நிந்தவூருக்கு வருகை தரவுள்ள அதிமேதகு ஜனாதிபதி அவர்களை சபை உறுப்பினர்கள் பாராட்டி உரையாற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

158 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

147 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

138 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

137 0 0