பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை (09) பொலிஸார் விசேட சுற்றிவளைப்பில் ஈடுபட்டபோது, 589 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த நடவடிக்கையின்போது 27,816 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், 16 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 75 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 62 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 289 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 137 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 4,281 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Posts
சுகாதாரத் துறையில் அதிரடி மாற்றம்.!
நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பில் நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளை மக்களுக்கு மிகவும் வினைத்திறனுடன் கொண்டு சேர்ப்பதுடன், வளங்களை முன்னுரிமை அடிப்படையில் சரியாகப் பயன்படுத்துவதை இலக்கு வைத்து மாவட்ட...
நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு.!
மாவனெல்லை, ஹேலிஸ்வத்த பகுதியில் மா ஓயாவில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மாவனெல்லைப் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் என...
விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!
கண்டி - மஹியங்கனை பிரதான வீதியின் உடுதும்பர, நிசருவ பகுதியில் இன்று (10) முற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் உந்துருளி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சுமார்...
யாழ்தேவி ரயில் சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்.!
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் யாழ்தேவி ரயில் நாளை (11) முதல் மீண்டும் தமது சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, திங்கள், புதன் மற்றும்...
யாழ் மாவட்ட கல்வியை சிதைப்பதற்கு தீவிர முயற்சி – ஆளுநரும் உடந்தை என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு.!
யாழ் மாவட்ட கல்வியை சிதைப்பது மட்டுமல்லாது வட மாகாண கல்வியை முழுமையாக சிதைக்கும் நிகழ்ச்சி நிரலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நிலையில் அதற்கு...
தெற்கு அதிவேக வீதியில் கோர விபத்து.!
பெலியத்த தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த - கசாகல இடையிலான பகுதியில் 154 ஆவது மைல்கல்லுக்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற வாகன விபத்தில் 10...
புதிய தலைமுறையின் எதிர்பார்ப்பே இந்த வெற்றி.!
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ச.ஜோசப் விஜய்க்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தனது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது...
ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!
கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில், நேற்று சனிக்கிழமை (09) சடலம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் சுமார் 05 அடி 06 அங்குலம், குட்டையான தலைமுடி மற்றும் தாடி...
இரு குழுக்களுக்கு இடையே மோதல்; நால்வர் வைத்தியசாலையில் அனுமதி.!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள் குளம் பகுதியில் நேற்றிரவு (09) இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் படுகாயமடைந்து கிளிநொச்சி, யாழ்ப்பாணம், அனுராதபுரம், கொழும்பு...
விஜய்க்கு அநுர வாழ்த்துச் செய்தி.!
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ...










