உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

உலகக்கோப்பை இறுதிப்போட்டி டிக்கெட் விலை 32 ஆயிரம் அமெரிக்க டொலராக உயர்வு!

48 பார்வைகள்

அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2026 பிபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து தொடரின் டிக்கெட் விலைகள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை 19, ஆம் திகதி நியூ ஜெர்சியின் மெட்லைஃப் (MetLife) மைதானத்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்கான சிறந்த இருக்கைகளின் விலையை பிபா (FIFA) நிறுவனம் மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி, ஒரு டிக்கெட்டின் விலை 32,970 அமெரிக்க டொலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிக்கெட் விலையில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களான நெல்லி போ (Nellie, bo.)மற்றும் ஃபிராங்க் பலோன் (Frank Ballon)ஆகியோர் பிபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவுக்கு (Gianni Infantino)கடிதம் எழுதியுள்ளனர்.

“டிக்கெட் விலையைத் தீர்மானிப்பதில் பிபா ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதாகவும், சாதாரண ரசிகர்கள் போட்டியைப் பார்ப்பதைக் கடினமாக்குவதாகவும்” அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதேவேளை, ரசிகர்களுக்கு மற்றுமொரு சுமையாக, மெட்லைஃப் மைதானத்திற்குச் செல்வதற்கான நியூ ஜெர்சி போக்குவரத்து (NJ Transit) கட்டணம் 150 டொலர்களாகத் திட்டமிடப்பட்டு, பின்னர் 105 டொலர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது சாதாரண நாட்களின் கட்டணத்தை விட (13 டொலர்கள்) பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மெட்லைஃப் மைதானத்தில் இறுதிப்போட்டி உட்பட மொத்தம் 8 போட்டிகள் நடைபெறவுள்ளன. ஜூன் 13 முதல் பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து போன்ற முன்னணி அணிகளின் லீக் போட்டிகள் தொடங்கவுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடரில் பங்கேற்பதற்காக அந்தநாட்டை சென்றடைந்த இலங்கை T20 கிரிக்கெட் அணிக்கு இஸ்லாமாபாத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இஸ்லாமாபாத் வானூர்தி நிலையத்தை…

79 0 0
விளையாட்டுச் செய்திகள்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட்…

81 0 0
விளையாட்டுச் செய்திகள்

சீன பகிரங்க டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற சீன பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், ஜப்பானின் முன்னணி வீராங்கனையான நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு…

90 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டு விழா : ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தியது இந்தியா

ஆசிய விளையாட்டு விழாவின் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில், 124 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி,…

74 0 0