உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

விடைபெற்றார் வியட்நாம் ஜனாதிபதி.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
29 பார்வைகள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்புக்கு இணங்க, இலங்கைக்கு அரச விஜயம் மேற்கொண்டிருந்த வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் உள்ளிட்ட தூதுக்குழுவினர், தமது விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, நேற்று இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

வியட்நாம் – இலங்கை இடையிலான நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தி, இரு நாட்டு மக்களுக்கும் பல்வேறு நன்மைகளை பெற்றுத்தரும் வகையில், வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் இலங்கைக்கு வெற்றிகரமான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

வியட்நாம் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டது 15 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகும். தற்போதைய அரசின் கீழ் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்து இலங்கை முன்னேறிச் செல்லும் ஒரு தருணத்தில் இந்த விஜயம் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும்.

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினரை வழியனுப்புவதற்காக, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

64 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

59 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0