உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழ்தேவி புகையிரத சேவை இனி வாரத்தில் மூன்று நாட்களும்!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
58 பார்வைகள்

யாழ்தேவி புகையிரத சேவையானது வாரத்தில் மூன்று நாட்கள் சேவையில் ஈடுபட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது இடம் பெற்று வரும் சேவைக்கு மேலதிகமாக வாரத்தில் திங்கட்கிழமை புதன்கிழமை வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று தினங்கள் கொழும்பிலிருந்து காங்கேசன் துறை வரை சேவையில் ஈடுபடவுள்ளது. இச்சேவையானது எதிர்வரும் (11.05.2026) திங்கட்கிழமையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த தினங்களில் கொழும்பிலிருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு வவுனியாவை 11.36 மணிக்கு கிளிநொச்சி நகரத்தை 12.51 மணிக்கும் யாழ்ப்பாணத்தை 1.59 மணிக்கும் வந்தடையும் புகையிரதம் இறுதியாக 2.33 மணிக்கு காங்கேசன் துறையை சென்றடையும்.

அவ்வாறே எதிர்வரும் செவ்வாய்க் கிழமையிலிருந்து (12.05.2026) திகதியிலிருந்து காங்கேசன் துறையில் ஆரம்பிக்கும் புகையிரத சேவையானது யாழ்ப்பாணத்தில் 11.00 மணிக்கும் கிளிநொச்சியில் 12.14 மணிக்கும் வவுனியாவில் 1.35 மணிக்கும் சென்றடைந்து இறுதியாக கொழும்பு கோட்டையை 07.03 மணிக்கு சென்றடையும்.

இப் புகையிரத்திற்கான கட்டடங்கள் சாதாரண கட்டணங்களாகவே அறவிடப்படவுள்ளன. இவற்றைத் தவிர வழமை போன்று முதலாம் இரண்டாம் வகுப்பு ஆகியவற்றிற்கான ஆசனங்களை முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளக் கூடியதாக இருக்கும் என யாழ்ப்பாண பிரதான புகையிரத நிலைய பொறுப்பதிகாரி தி. பிரதீபன் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

153 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

145 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

135 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

134 0 0