உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு பிராந்திய பணிப்பாளர் திடீர் விஜயம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
22 பார்வைகள்

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் சேவைகளை மேம்படுத்துவது மற்றும் அபிவிருத்திப் பணிகள் குறித்த களஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் நேற்று வியாழக்கிழமை(07) அவ்வைத்தியசாலைக்குத் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது, வைத்தியசாலையின் நோயாளர் விடுதிகள் உட்பட பல்வேறு பிரிவுகளுக்கும் நேரில் சென்ற பணிப்பாளர், அங்கு நோயாளர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அலகுகளின் செயற்பாடுகள் குறித்து கேட்டறிந்து கொண்டதுடன் குறைபாடுகளையும் நேரில் அவதானித்தார்.

அதனைத் தொடர்ந்து, வைத்தியசாலையின் அத்தியட்சகர் டீ.பிரபாசங்கர் மற்றும் பொது வைத்திய நிபுணர் வைத்தியர் ஐ.எல்.எம்.சபீக், திட்டமிடல் பொறுப்பு வைத்தியர் வைத்தியர் ஏ.ஆர்.நியாஸ் அஹமட், கணக்காளர் எஸ்.திருப்பிரகாசம் உள்ளிட்ட உத்தியோகத்தர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

இதன்போது, வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்திப் பணிகள் மற்றும் பொதுமக்களுக்கான சுகாதார சேவைகளை மேலும் வினைத்திறனாக முன்னெடுப்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்தினை மக்கள் பாவனைக்கு விரைவாகக் கையளிப்பதற்கும், மகப்பேற்று விடுதியினை புதிய கட்டிடத்துக்கு மாற்றுவதற்கும் உரிய ஒழுங்குகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு பிராந்திய பணிப்பாளர் வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கு இதன்போது பணிப்புரை விடுத்தார்.

வைத்தியசாலையின் கண் சிகிச்சை விடுதிக்கு (Eye Ward) தேவையான அத்தியாவசிய தளபாடங்களை பிராந்திய பணிப்பாளர் இதன்போது கையளித்தார்.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம்.மாஹிர் உட்பட வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

63 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

59 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0