பாதுகாப்பு கருதி; பிரதான சாலையில் கம்பி வேலி அமைக்க கோரிக்கை!
அம்பகமு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கலவல்தெனியா செல்லும் பிரதான சாலையில் கம்பி வேலி அமைக்க கோரிக்கை.
கலவல்தெனிய நோட்டன் பிரிட்ஜ் நகரத்திற்கு செல்லும் பிரதான சாலையில் உள்ள பாலம் ஒன்றில் பாதுகாப்பு வேலி இல்லாத காரணத்தால் கலவெல்தெனியா பாடசாலைக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் மக்கள் பாதுகாப்பற்ற வளைவில் உள்ள பாலத்திற்கு வலுவான இரும்பு வேலி அமைக்கப்பட வேண்டும்.
இது குறித்து அம்பகமுவ பிரதேச செயலாளர் மற்றும் அம்பகமு பிரதேச சபையின் தவிசாளர் சபையின் பிரதிநிதிகளுக்கும்.அப்பகுதி அதிகாரிகளுக்கும், சம்பந்தப்பட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுக்கும் உடன் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
